fbpx

வீடு வாங்கப்போறீங்களா?… முன்பதிவு செய்வதற்கு முன் இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய பல முக்கியமான காரணிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்க்கலாம்.

”வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்” என்று நம் முன்னோர்கள் தெரியாமையை சொன்னாங்க. ஆம், சொந்த வீடு வாங்குவது என்பது நம் எல்லோரின் கனவாக இருக்கும். அந்த கனவு நிறைவேறிவிட்டால் அதை விட ஆனந்தம் வேறு என்ன இருக்கு. அந்த அளவிற்கு சொந்த வீட்டின் கனவு ஒவ்வொருவரின் மனதிலும் நீங்க இடம் பிடித்தவை. அப்படி சொந்த வீடு வாங்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு பிளாட்டை முன்பதிவு செய்யலாமா வேண்டாமா என்பது தனிப்பட்ட முடிவு. ஒரு முடிவை எடுப்பதற்கு முன், நன்மை தீமைகளை கவனிக்கவேண்டியது முக்கியம். சரியான பில்டரைத் தேர்வு செய்வது மிக முக்கியம். அவருடைய வரலாற்றை ஆராய்ந்து பார்ப்பது முக்கியம். பில்டர் இதற்குமுன் கட்டிக் கொடுத்த வீடு களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பதை நேரில் சென்று பார்க்க வேண்டும்.மேலும், அந்த வீடுகளில் வசிப்பவர்களிடம் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. ஆவணங்களின் உண்மைத் தன்மை மிக முக்கியம். வீடு கட்டுமானம், டிசைன், லொகேஷன் எல்லாம் அருமை யாக இருந்து, ஆவணங்களில் ஏதாவது பிரச்னை எனில், ஒட்டு மொத்தமாகப் பணமும் நிம்மதியும் போய்விடும். நாளைக்கு விற்கும் போது சிக்கல் ஏற்படும் அல்லது விலை குறைத்துக் கொடுக்க வேண்டி வரும்.குறிப்பாக, சட்டமும் அரசாங்கமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

உள்ளாட்சி மற்றும் அரசு அமைப்புகளிடமிருந்து தேவையான அனைத்து ஒப்புதல்கள் மற்றும் உரிமங்களைப் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். சுற்றுச்சூழல் அனுமதி, நில உரிமை மற்றும் நில பயன்பாட்டு அனுமதிகளை சரிபார்க்கவும். போக்குவரத்து வசதி இருக்கிறதா, மருத்துவமனை வசதி இருக்கிறதா, கல்லூரிகள், பள்ளி கூடங்கள் இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும். அவசர பட்டு வாங்கி விட்டு பின்னல் கஷ்டப்பட கூடாது. அவர்கள் நீண்ட தூரம் அலையும்போது, படிப்பு பாதிக்கப்படும். எனவே, வீடு என்பது வசிக்க அத்தியாவசிய வசதிகளுடன் இருப்பது மிக அவசியமாகும்.

ஒரு சட்ட நிபுணர் அல்லது வழக்கறிஞரை நியமித்து, சொத்தின் சட்டப்பூர்வ உரிமையைச் சரிபார்த்து, நிலுவையில் உள்ள வழக்குகள் அல்லது தகராறுகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். நிதி அம்சங்கள்: அடிப்படை விலை, பராமரிப்பு, பார்க்கிங் மற்றும் வரிகள் போன்ற கூடுதல் கட்டணங்கள் உட்பட மொத்தச் செலவைச் சரிபார்க்கவும். கட்டண அட்டவணையைப் புரிந்துகொண்டு, அது உங்கள் நிதித் திறனுடன் ஒத்துப்போகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பணம் செலுத்துதல் மற்றும் வைத்திருப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான அபராதங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். கட்டுமான காலக்கெடு: திட்டப்பணியின் எதிர்பார்க்கப்படும் நிறைவு தேதி மற்றும் பில்டருக்கு சரியான நேரத்தில் திட்டங்களை வழங்குவதற்கான வரலாறு உள்ளதா என்பதைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெறுங்கள்.

ஒரு வங்கியில் கடன் வாங்கும்போது வட்டி விகிதம், செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு, மற்ற கட்டணங்கள் ஏதேனும் உண்டா? மாத தவணை எவ்வளவு? முன் கூட்டியே கடனை திரும்ப செலுத்தினால் அதற்கு எவ்வளவு கட்டணம் என பலவும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும். வீடு வாங்குபவர்களுக்குப் பல பேர் மனையோ, வீடோ என்ன விலை போகிறது என அக்கம்பக்கத்தில் விசாரிப்ப தில்லை. மனை வாங்கி வீடு கட்டி சென்ற பிறகு அல்லது கட்டிய வீட்டை வாங்கி குடியேறிய பிறகு, புரொமோட்டர் அல்லது பில்டர் என்னிடம் அதிக விலைக்கு இடம் அல்லது வீட்டை விற்று என்னை ஏமாற்றிவிட்டார் என்பார்கள். சிலர் குறைந்த விலைக்கு வாங்கி அவஸ்தை படுவதும் உண்டு.

Kokila

Next Post

நாய்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவிய புருசெல்லா கேனிஸ் நோய்!… குணப்படுத்தவே முடியாது! மரணம் தான் ஒரே தீர்வாம்!

Wed Sep 20 , 2023
பிரிட்டன் நாட்டில் நாய்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவிய புருசெல்லா கேனிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் குணப்படுத்தவே முடியாத மிக மோசமான நோய் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனாவின் கோரத்தாண்ட பாதிப்பில் இருந்து வெளியே வர மக்கள் இன்றளவும் முயற்சித்து வருகின்றனர். இதன்காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் முடங்கிப் போனது. இருப்பினும் அலை அலையாக வைரஸின் புதிய மாறுபாடுகள் என்ற பெயரில் கொரோனா […]

You May Like