fbpx

வீடு, மனை வாங்கப் போறீங்களா..? அப்படினா தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை பாருங்க..!!

பட்டா என்பது ஒரு நிலத்திற்காக வருவாய்த் துறை வழங்கும் பதிவு ஆவணம் ஆகும். சிட்டா என்பது சொத்து அமைந்துள்ள பகுதி, அளவு, உரிமையாளர் உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய ஆவணமாகும். இந்த இரு ஆவணங்களும் இணைக்கப்பட்டு, பட்டா சார்ந்த தகவல்கள் அனைத்தும் ஒரே ஆவணத்தில் தற்போது கிடைத்து வருகிறது. குடிமக்கள் தங்களது பட்டா – சிட்டா, அடங்கலை ஆன்லைன் மூலமாகவும் பார்த்துக் கொள்ளலாம்.

அந்த வகையில் தற்போது, வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்குவோரின் வசதிக்காகவே, புதிய வசதியை தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கிறது. இது தொடர்பான இணைய தள வசதி ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, சொத்து தொடர்பான வழக்கு விவரங்கள், நீதிமன்ற தடை உத்தரவுகள் எதுவும், வில்லங்க சான்றிதழ்களில் தெளிவாக தெரிவதில்லை. சொத்து உரிமை மாற்றம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, சம்பந்தப்பட்டவர்கள் சார் – பதிவாளரிடம் தாக்கல் செய்தால் மட்டுமே, அதுகுறித்து தெரியவரும்.

மற்றபடி, வழக்குகள் நிலுவையில் இருப்பது, அதன் தற்போதைய நிலவரம் இதெல்லாம் மக்களுக்கு தெரிவதில்லை. இந்த விவரம் எதுவும் தெரியாமல், அந்த சொத்துக்களை வாங்க நேர்கிறது. பத்திரப்பதிவுக்கு போகும்போதுதான், வழக்குகள் பற்றி தெரியவருகிறது. ஆனால், அந்த நேரத்தில் வேறு எதையும் செய்ய முடிவதில்லை. இந்த சிக்கலை தீர்க்கவே வருவாய் துறை முக்கிய அதிரடியை கையிலெடுத்துள்ளது.

அதன்படி, பட்டா, “அ” பதிவேடு, நில அளவை வரைபடம் போன்ற விவரங்களை ஆன்லைன் முறையில் பொதுமக்கள் பெற வேண்டும் என்பதற்காக இ – சேவை இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை www.clip.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : 50 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் பேய் மழை..!! பாலைவனத்தில் நடந்த பயங்கரம்..!! இது ஆச்சரியம் அல்ல எச்சரிக்கை..!!

English Summary

The Tamil Nadu government has brought a new facility for the convenience of property buyers like houses and plots.

Chella

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!! இனி இவர்களுக்கு எந்த தடங்கலும் வராது..!! இவர் சொன்னதை கவனிச்சீங்களா..?

Mon Oct 14 , 2024
As the festive season has begun in Tamil Nadu, the stocks of essential commodities in ration shops are running low.

You May Like