fbpx

புது வீடு வாங்க போறீங்களா..? மறந்தும் கூட இந்த தவறை செய்துவிடாதீங்க..!!

“வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்” என்று சும்மாவா சொன்னாங்க. வீடு வாங்குவது மற்றும் திருமணம் செய்வது என்பது நமக்கு மன அழுத்தம் தரக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை கொண்டு வரலாம். வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது என்பது பலரது கனவாக இருந்தாலும் அதனை பற்றிய முழு விவரமும் தெரியாமல் காலை விடுவது உங்களை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு சேர்த்துவிடும். உங்களுக்கு வீடு வாங்கும் எண்ணம் இருந்தால் உங்களிடம் நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள் என்ன என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

வீட்டை வாங்க வேண்டுமா? அல்லது வாடகைக்கு எடுக்க வேண்டுமா?

வீட்டை வாங்குவதற்கு முடிவு செய்வதற்கு முன்பு வாடகை வீடு மற்றும் சொந்த வீடு ஆகிய இரண்டிலும் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். உங்களது வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார இலக்குகளுக்கு ஈடு கொடுக்க முடியும் அளவுக்கு ஒரு வீட்டை நம்மால் வாங்க முடியுமா? என்பதை யோசிங்கள். மறுபுறம் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது என்பது நீண்ட கால அர்ப்பணிப்பு கொண்ட பலவித நன்மைகளுடன் வருகிறது. ஆகவே, ஒரு வீட்டை கட்டி அதை பராமரிப்பதற்கான பொறுப்புகள் முழுவதையும் ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா அல்லது வாடகை கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ள விரும்புகிறீர்களா என்பதை முடிவு செய்யுங்கள்.

பணத்தை உங்களால் புரட்ட முடியுமா?

வீட்டை வாங்கும் முன் நீங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி இது. உங்களது வருமானம், சேமிப்பு மற்றும் கடன் ஆகிய பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில் வீடு வாங்குவதற்கான பணத்தை உங்களால் புரட்ட முடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள். லோன் EMI-கள், இன்சூரன்ஸ் மற்றும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக் கொள்ள வருமானம் உங்களிடம் உள்ளதா? என சிந்தியுங்கள். ஒருவேளை நீங்கள் ஹோம் லோன் மூலமாக வீடு வாங்க நினைத்தால் உங்களது கிரெடிட் ஸ்கோர், கடன் வழங்கும் நிறுவனத்தை அல்லது வங்கியை திருப்தி அடைய செய்யுமா? என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள

வீட்டின் உரிமையாளராக மாற தயாராக உள்ளீர்களா?

வீட்டு உரிமையாளர் என்பது வெறுமனே பொருளாதாரத்தோடு நின்று விடுவது அல்ல. வீட்டை பராமரிப்பது மற்றும் பழுது பார்ப்பது, சொத்து தொடர்பான வரிகளை செலுத்துவது, கார்பரேஷன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றுவது போன்ற பல விஷயங்களும் இதில் அடங்கும். இதுபோன்ற கூடுதல் செலவுகளை ஏற்கக்கூடிய அளவுக்கு உங்களிடம் பொருளாதாரம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இறுதியாக ஒரு வீட்டை வாங்க வேண்டுமா? வேண்டாமா? என்பது உங்களது பொருளாதார சூழ்நிலை, இலக்குகள் மற்றும் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் நீங்கள் எடுக்கும் முடிவாகும். நீங்கள் எடுக்கப் போகும் முடிவுகளுக்கு இந்த கேள்விகள் நிச்சயமாக உதவியாக இருக்கும்.

Chella

Next Post

ஆசைவார்த்தைக்கு மயங்கி ஆண் நண்பருடன் பலமுறை உடலுறவு..!! சிறுவயதிலேயே கர்ப்பம்..!! ஷாக் கொடுத்த ஷகிலா..!!

Tue Oct 24 , 2023
சினிமா திரையுலகில் ஆபாச நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டவர் தான் நடிகை ஷகிலா. ஆனால், தற்போது அவரது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை நினைத்து வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இவர் மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு ஆபாச படங்களில் நடித்து பெரும் அளவில் பிரபலம் ஆனார். அத்துடன். இவர் தனது 15-வது வயதில் ‘ப்ளே கேள்ஸ்’ என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். பின்னர் மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல்வேறு […]

You May Like