fbpx

ஸ்கூட்டர் வாங்கப்போறீங்களா..? ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ. பயணிக்கலாம்..!! விலையும் இவ்வளவு தானா..?

பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு சிம்பிள் எனர்ஜி நிறுவனம் ஒரு வழியாக தனது சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக தேதியை அறிவித்துவிட்டது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகமாகி வருகிறது. குறிப்பாக ஓலா மற்றும் ஏத்தரின் வருகைக்குப் பிறகு ஏராளமான மக்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், ஓலாவுக்கும் ஏத்தருக்கும் போட்டியாக சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் அறிமுகத்தின் போதே சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இந்த ஸ்கூட்டர் தயாரிப்பில் கால தாமதம் ஏற்பட்டது. ஒரு வழியாகத் தமிழகத்தில் இந்நிறுவனம் ஆலையை அமைத்து உற்பத்தியைத் துவங்கிவிட்டது.

இந்நிலையில், இதற்கு முன்னர் பல்வேறு முறை ஸ்கூட்டரின் அறிமுக தேதி குறித்துத் திட்டமிடப்பட்டு அதை கேன்சல் ஆகி கடைசி ஒரு வழியாக தற்போது இறுதியாகத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மே 23ஆம் தேதி சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெறவுள்ளது. சிம்பிள் ஒன் ஸ்கூட்டரை பொருத்தவரை இந்தியாவிலேயே அதிக ரேஞ்ச் கொண்ட ஸ்கூட்டர்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்கூட்டர் 2 ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைக்கப்பட்டாலும், இந்த ஸ்கூட்டர் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வர இந்தியாவில் சில ஆட்டோமொபைல் ஸ்டாண்டர்டுகள் உள்ளது. 156 தர கட்டுப்பாடுகள், 3 பேட்டரி தர கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கடந்து தற்போது உற்பத்தி துவங்கி நடந்து வருகிறது. வரும் மே மாதம் முதல் விற்பனையும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பிள் எனர்ஜி ஒன் ஸ்கூட்டரை பொருத்தவரை சின்ன பேட்டரியில் 236 கி.மீ. ரேஞ்ச் கொடுக்கக் கூடியது. இதன் பெரிய பேட்டரி ஆப்ஷனில் 300 கி.மீ. வரை ரேஞ்ச் தரும் என சொல்லப்படுகிறது. இது 0-40 கி.மீ வேகத்தை வெறும் 2.77 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 105 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும் அம்சம் கொண்டது.

இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை பொருத்தவரை 4.8 கிலோ வாட் ஹவர் மற்றும் 8.5 கிலோ வாட் ஹவர் என 2 பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் பிரேக்கை பொருத்தவரை 2 வீலர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. இது கம்பைன் பிரேக்கிங் சிஸ்டத்துடன் சேர்ந்து இயங்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரில் சீட்டிற்குக் கீழே 30 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. இந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 4 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. பிரேஸன் பிளாக், நம்ம ரெட், அசூர் ப்ளூ மற்றும் கிரேஸ் ஒயிட் ஆகிய கலர்களில் இது கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் டச் ஸ்கிரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது பல்வேறு கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் விலையைப் பொருத்தவரை ஸ்டாண்டர்டு வேரியன்ட் ரூ1.10 லட்சம் என்ற விலையிலும், எக்ஸ்ட்ரா ரேஞ்ச் வேரியன்ட் ரூ1.45 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது.

Chella

Next Post

இன்று முதல் காலாவதியான அரசுப் பேருந்துகள் நிறுத்தம்..!! கோடை விடுமுறையில் வெளியூர் செல்லும் பயணிகள் அதிர்ச்சி..!!

Mon May 1 , 2023
புதுச்சேரியில் 15 ஆண்டுகள் காலாவதியான அரசு பேருந்துகள் இன்று (மே 1) முதல் நிறுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய வாகன அழிப்புக் கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள தனிநபர் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு மேலான வணிக பயன்பாட்டு வாகனங்கள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் சாலை போக்குவரத்து துறையால் இயக்கப்பட்டு […]

You May Like