fbpx

உடல் எடையை குறைக்க போறீங்களா..? அப்படினா இந்த 5 கொரிய பானங்களை பகிருங்கள்..!!

ஆரோக்கியமான வாழ்க்கை முறை வேண்டி, பலரும் உடல் எடை குறைப்பிற்கு உதவும் கொரிய பானங்களை விரும்பி பருக ஆரம்பித்துள்ளனர். இந்த பானங்களை குடிப்பதால் எளிதாக தொப்பை குறைவதாக கூறுகின்றனர். பொதுவாக உடல் எடை குறைப்பிற்கான கொரிய நுட்பங்கள் யாவும் எளிமையாகவும் சிறந்த பயனைத் தரக்கூடியதாகவும் உள்ளன. நீங்களும் உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அப்படியென்றால் 5 கொரிய பானங்களைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

பார்லி டீ : கொரியாவின் மிகப் பிரபலமான பார்லி டீ, புத்துணர்ச்சியான சுவைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கும் பெயர் பெற்றது. சூடான நீரில் நன்கு வறுக்கப்பட்ட பார்லி தானியத்தை பயன்படுத்தி இந்த டீ தயாரிக்கப்படுகிறது. பார்லி டீயில் எந்தவித கஃபைனும் கிடையாது. குறைவான கலோரிகளும் இருப்பதால் சர்க்கரை நிறைந்த பானங்களுக்கு சிறந்த மாற்றாக இருக்கிறது.

க்ரீன் டீ : கொரியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மக்களால் க்ரீன் டீ பருகப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள். ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகமுள்ள க்ரீன் டீ பருகினால், நம் மெட்டபாலிஸம் தூண்டப்படுவதோடு உடலில் உள்ள கொழுப்புகள் வேகமாக குறைய உதவுகின்றன.

ஒமிஜா டீ : 5 சுவை கொண்ட பெர்ரி டீ என அழைக்கப்படும் ஒமிஜா டீ, Schisandra chinensis என்ற செடியில் கிடைக்கும் உலர்ந்த பழத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் தனித்துவமான சுவைக்காகவே பலராலும் விரும்பி பருகப்படுகிறது. இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு, காரம் என 5 சுவைகள் நிறம்பியது. இதை பருகுவதால் நமது செரிமானம் மேம்படுவதோடு உடலின் ஆற்றலும் அதிகமாகிறது. மேலும், இந்த டீயை பருகுவதால் உடல் எடை குறைவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

யூஜி டீ : கொரியாவின் பாரம்பரியமான இந்த டீ, கொரியன் சிட்ரான் அல்லது யூஜா பழத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது கசப்பான சுவை கொண்டது. உடல் எடை குறைப்பிற்கும் இந்த பானத்திற்கும் நேரடியான தொடர்பு இல்லையென்றாலும், உங்கள் சரிவிகித டயட்டில் யூஜா டீயை சேர்த்துக் கொண்டால் ஒட்டுமொத்த உடல்நலனுன் ஆரோக்கியம் பெறும்.

ரோஸ் டீ : குல்ச்சா அல்லது ரோஸ் டீ, மற்றொரு அருமையான கொரிய பானமாகும். இதை தினமும் பருகி வந்தால் உடல் எடை குறைய உதவும். குங்குமப்பூ மற்றும் ரோஜா பூவின் இதழ்களை சேர்த்து இந்த டீ தயாரிக்கப்படுகிறது. இந்த கொரிய பானத்தில் நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் ஃபிளாவோனாய்ட் மற்றும் வைட்டமின் சி அதிகமுள்ளது.

Chella

Next Post

டெல்லியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி..!! ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..!!

Sat Feb 17 , 2024
டெல்லியில் உள்ள படேல் நகர் – தயாபஸ்தி பிரிவில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துகுள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இன்று ஜாகிரா மேம்பாலம் அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத நிலையில், தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடம் புரண்டதில் 8 பெட்டிகள் விபத்துக்குள்ளானது. இதையடுத்து, […]

You May Like