நம் இந்திய நாட்டில் தங்கத்திற்கென்று தனி மதிப்பு இருக்கும். அதற்கு காரணம், தங்கத்தை எப்போது வேண்டுமானாலும், பணமாக மாற்றி பெற்றுக் கொள்ளலாம். தங்க கடன் என்பது அவசரப் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், பலருக்கும் ஒரு கிராம் தங்க நகைக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்..? என்ற விவரங்கள் தெரியாது. அதுபற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தங்கத்தின் எடை மற்றும் அடமானம் வைக்கும் போது தங்கத்தின் விலை ஆகிய இரண்டு காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. நீங்கள் வாங்கிய தங்கத்தின் மதிப்பு, தூய்மை மற்றும் லோன் டு வேல்யூ ரேஷியோ என்ற 3 காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் வழங்கும் தங்கத்தின் தூய்மை அதன் மதிப்பை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடன் வழங்குபவர்கள் 18 கேரட் முதல் 24 கேரட் வரை தூய்மையான தங்கத்தை ஏற்றுக் கொண்டு கடன் தருகின்றனர்.
24 கேரட் தங்கம் தூய்மையானது. எனவே, 18 கேரட் தங்கத்தோடு ஒப்பிடுகையில் 24 கேரட் தங்கத்திற்கு அதிக பணம் கிடைக்கும். தங்கக் கடனை மதிப்பிடுவதில் தங்கத்தின் அப்போதைய விலையும் கருத்தில் கொள்ளப்படும். உதாரணமாக, உங்கள் பகுதியில் 1 கிராம் தங்கம் ரூ.7,000 என்று வைத்துக் கொள்வோம். இது உங்கள் தங்க கடனுக்கான அடிப்படை விலை மட்டுமே. பொதுவாக தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% வரை கடன் தொகையாக பெறலாம். எனவே அதிக சந்தை விகிதம் இருக்கும் போது நீங்கள் பெரும் கடன் தொகையும் அதிகரிக்கும்.
லோன் டு வேல்யூ ரேஷியோ என்பது உங்கள் தங்கத்தின் சந்தை மதிப்பை வைத்து எவ்வளவு கடன் வழங்கப்பட இருக்கிறது என்பதை தீர்மானிக்கும் விகிதமாகும். பெரும்பாலான கடன் வழங்குனர்கள் 75% வரை கடன் வழங்குவார்கள். உதாரணமாக, 24 கேரட் தங்கத்தின் மதிப்பு 7,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் 100 கிராம் தங்கத்தை அடமானம் வைக்கிறீர்கள். அப்படியென்றால், உங்கள் தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.7,00,000. இதில் 75% வரை நீங்கள் கடனாகப் பெறலாம். அதன்படி ரூ.5,25,000 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.
Read More : BEL நிறுவனத்தில் வேலை..!! மாத சம்பளம் ரூ.55,000..!! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா..?