fbpx

நாளை (ஏப்.2) EMI கட்ட போறீங்களா..? இனி அந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!! சிக்கல் உங்களுக்குத்தான்..!!

மாதம், மாதம் உங்களுக்கு 2ஆம் தேதி இஎம்ஐ வருவது போல் கடன் வாங்கி உள்ளீர்களா… மறந்து அந்த தவறை இனிசெய்ய வேண்டாம். 2ஆம் தேதிக்கு பதில் 5ம் தேதி அல்லது 7ம் தேதி இஎம்ஐ என்றால் நிச்சயம் எளிதாக இருக்கும். ஏப்ரல் மாதமான இம்மாதம் 2ஆம் தேதி இஎம்ஐல் லோன் வாங்கிய பலரை சிக்கலில் தள்ளியுள்ளது. ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் புதிய நிதியாண்டு பிறக்கிறது. இது ஒருபுறம் எனில், சம்பளம் இந்த மாதம் ஒன்றாம் தேதி பலருக்கும் வந்திருக்காது. புனித வெள்ளி மார்ச் 29ஆம் தேதி வந்தது. பிறகு சனி மற்றும் ஞாயிறு வந்தது.

திங்கட்கிழமையான இன்று ஏப்ரல் 1ஆம் தேதி வந்துள்ளது. அடுத்தடுத்து வங்கி விடுமுறை நாட்கள் என்பதுடன், நிதியாண்டு கணக்கினை முடிக்க வேண்டிய நிலையில் வங்கிகள் இருந்தன. இதேபோல் நிறுவனங்களுமே நிதியாண்டிற்கான கணக்கை முடிக்கும் பணியில் இருந்தன. இந்த காரணங்களால் இந்த மாதம் பல நிறுவனங்களில் 30ஆம் தேதி, 31ஆம் தேதி, ஏப்ரல் 1ஆம் தேதி சம்பளம் போடப்படவில்லை.

பல நிறுவனங்கள் ஏப்ரல் 2ம் தேதி தான் சம்பளம் போட முடியும் என்பதை முன்கூட்டிய அறிவித்துள்ளன. பல ஐடி நிறுவனங்களுமே இதே முடிவினை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏப்ரல் 2ஆம் தேதி இஎம்ஐயில் கடன் வாங்கியவர்கள் வழக்கத்தைவிட இந்த முறை சிக்கலை சந்தித்துள்ளனர். வீட்டு உபயோக பொருட்களை இஎம்ஐயில் வாங்குறீங்க, பைக் அல்லது கார் வாங்குறீங்க அப்படீன்னா, இஎம்ஐ தேதி குறைந்தது ஐந்து அல்லது 7ம் தேதி என்று இருப்பதே நல்லது. ஏனென்றால், எல்லா மாதமும் உங்களால் 5ம் தேதி இஎம்ஐ சரியாக கட்ட இயலாது.

சில தனியார் நிதி நிறுவனங்களில் இஎம்ஐயாக பொருட்கள் வாங்கினால் அதற்கான இஎம்ஐ தேதி 2ம் தேதியாகவே இருக்கும்.. அப்படியான நிலையில் சில நேரங்களில் சம்பளம் தாமதாகக வந்தாலோ அல்லது வங்கிகள் அடுத்தடுத்து விடுமுறை வந்தால் சிக்கலாகும். ஒருவேளை உங்களால் குறிப்பிட்ட தேதியில் இஎம்ஐ பணத்தை கட்டாமல் போனால் நீங்கள் கட்ட வேண்டிய அபராதம் 950 ஆக இருக்கும். தனியார் வங்கிகளில் 750 ரூபாய்க்கு மேல் அபராதமாக செலுத்த வேண்டியது வரலாம். இஎம்ஐ கட்டாமல் விடும் காரணத்தால் உங்கள் சிபில் ஸ்கோரும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

அதேபோல் இஎம்ஐ தேதி 2ஆம் தேதி என்றால் ஒன்றாம் தேதியே வங்கியில் பணத்தை இருப்பு வையுங்கள். நீங்கள் 2ஆம் தேதி காலையில் பணத்தை போடலாம் என்று நினைத்தால், அவர்கள் விடியற்காலையிலேயே இசிஎஸ் போட்டு பணத்தை எடுக்க முயற்சிப்பார்கள். அப்போது பணம் இல்லை என்றால், அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும். எனவே, முன்கூட்டியே பணத்தை வங்கியில் இருப்பு வையுங்கள். உங்களால் 2ம் தேதி மாதம் மாதம் பணம் கண்டிப்பாக கட்ட முடியும் என்றால் மட்டும், இஎம்ஐயில் பொருட்கள் வாங்குங்கள். அப்படி முடியாது என்றால் தவிர்ப்பதே நல்லது என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.

Read More : முஸ்லிம் இளைஞரை வெறி கொண்டு தாக்கிய கொடூரன்கள்..!! வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

Chella

Next Post

தமிழ்நாட்டில் கட்சி வாரியாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!! இத்தனை சுயேட்சை வேட்பாளர்களா..?

Mon Apr 1 , 2024
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை கட்சி வாரியாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், சுயேட்சை மற்றும் கட்சி வாரியாக வேட்பாளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிமுகவில் 34 வேட்பாளர்களும், திமுகவில் 22 வேட்பாளர்களும், நாம் தமிழர் கட்சி கட்சியில் 39 வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 609 பேர் என மொத்தம் 950 […]

You May Like