fbpx

உங்கள் ஏரியாவில் விநாயகர் சிலை வைக்கப்போறீங்களா..? அப்படினா இந்த கண்டிஷனை தெரிஞ்சிக்கோங்க..!!

விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் பட்டாசு வெடிக்க கூடாது என்பது உள்பட 11 முக்கிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகர காவல்துறை போட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த வேளையில் பொதுமக்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்வார்கள். இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைத்து வழிபட 11 முக்கிய கண்டிஷன்களை போலீசார் போட்டுள்ளனர்.

* விநாயகர் சிலைகள் வைக்கும் இடத்தின் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசு துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

* சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிகளிடம் விநாயகர் சிகைளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

* சிலையின் உயரமானது அடித்தளத்தில் இருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.

* தீயணைப்புத்துறை, மின்வாரியம் ஆகியவற்றிடம் இருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.

* மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ அல்லது பிற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும் கோஷமிடுவதற்கும் இடம் தரக்கூடாது.

* பிற வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் வைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.

* சிலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு தன்னார்வலர்களை 24 மணிநேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.

* நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான பலகைகள், விளம்பர தட்டிகள் வைக்கக்கூடாது.

* விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதித்த நாட்களில் மட்டுமே செல்ல வேண்டும். அதுவும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில், அனுமதிக்கப்பட்ட 4 சக்கர வாகனங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

* தீ பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மின்சார சாதனங்கள் பந்தல்களை அவ்வப்போது கண்காணித்து விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை.

Chella

Next Post

ஆசிய கோப்பையை 8 வது முறையாக கைப்பற்றியது இந்தியா..! இறுதி போட்டியில் இப்படி ஒரு வெற்றியா…

Sun Sep 17 , 2023
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியா முதலிடமும், இலங்கை 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியா மற்றும் இலங்கை […]

You May Like