fbpx

பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போறீங்களா..? நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜன.14ஆம் தேதி போகி பண்டிகை தொடங்கி, ஜன.15ஆம் தேதி பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. ரயிலில் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி., (IRCTC) இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் முன்பதிவு விவரங்கள் பின்வருமாறு…

-செப்டம்பர் 13 முன்பதிவு செய்வோர் ஜனவரி 11ஆம் தேதி பயணிக்கலாம்.

-செப்டம்பர் 14ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 12ஆம் தேதி பயணிக்கலாம்.

-செப்டம்பர் 15ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 13ஆம் தேதி பயணிக்கலாம்.

-செப்டம்பர் 16ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 14-ஆம் தேதி பயணிக்கலாம்.

-செப்டம்பர் 17ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 15ஆம் தேதி பயணிக்கலாம்.

-செப்டம்பர் 18ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 16ஆம் தேதி பயணிக்கலாம்.

-செப்டம்பர் 19ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 17ஆம் தேதி பயணிக்கலாம்.

Chella

Next Post

வியக்க வைக்கும் நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு..!! இத்தனை கோடிக்கு அதிபதியா..?

Tue Sep 12 , 2023
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரது காமெடிக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளனர். இவரது காமெடி காட்சிகளை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் இப்போதும் உலா வருகிறது. சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்த இவர், தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும், சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் […]

You May Like