fbpx

பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்கப் போறீங்களா..? இந்த விதிமுறைகளை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க..!!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதந்தோறும் ஊழியர்கள் பெறும் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் ஓய்வூதியத்திற்காக செலுத்தப்பட்டு வருகிறது. ஊழியர்களின் ஓய்வு காலத்தில் அவர்களின் அன்றாட வாழ்க்கை செலவுகளை உறுதிப்படுத்தும் வகையில், ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஓய்வூதிய திட்டத்தில் செலுத்தப்படும் மொத்த தொகையையும் ஊழியர்கள் தங்களின் பணிக்காலம் முடிந்த உடன் பெற்றுக் கொள்ளலாம். ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு பிஎஃப் நிதியிலிருந்து 90% தொகையை எடுத்துக் கொள்ள முடியும். பணிக்காலத்தில் இருக்கும் போது ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தால் 75% பிஎஃப் தொகையும், 2 மாதம் வேலை இல்லாமல் இருந்தால் முழு பிஎஃப் தொகையும் பெற்றுக் கொள்ள முடியும்.

பிஎஃப் நிதியிலிருந்து பணத்தை எடுப்பதற்கு உங்கள் அலுவலக பிஎஃப் அதிகாரியிடம் விண்ணப்பித்து, பின்னர் இ.பி.எஃப்.ஓ அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும். நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு மட்டுமே பிஎஃப் தொகையை பெற முடியும். 5 வருடங்களுக்கு முன் பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு டிடிஎஸ் விதிக்கப்படுகிறது. 5 வருடங்கள் பணியாற்றிய பிறகு பி எப் நிதியிலிருந்து பணம் எடுக்கப்படும் பட்சத்தில் அதற்கு வரி விதிக்கப்படுவதில்லை.

Chella

Next Post

அதிர்ச்சி..!! தமிழ்நாட்டில் பேருந்துகள் ஓடாது..!! போக்குவரத்து ஊழியர்கள் அதிரடி முடிவு..!!

Thu Oct 26 , 2023
தீபாவளி பண்டிகைக்கு இந்தாண்டு 20% போனஸ் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்னும் வெளியிடவில்லை. தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 9 தொழிற் சங்கங்கள் சார்பில் போக்குவரத்துத் துறை செயலருக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் இந்தாண்டு போக்குவரத்துத் […]

You May Like