பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அந்த வகையில் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ஜனவரி 11ஆம் தேதி சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் எழும்பூரில் இருந்து 11ஆம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு 12ஆம் தேதி 1 மணிக்குச் சென்றடையும்.
அதேபோல் மறு மார்க்கத்தில் நெல்லையில் இருந்து ஜனவரி 12ஆம் தேதி மாலை 3.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், 13ஆம் தேதி அதிகாலை 2.40 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த சிறப்பு ரயில் மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல் தாம்பரம் – நாகர்கோயிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் வரும் 11ஆம் தேதி இரவு 11.35 மணிக்குப் புறப்பட்டு, 12ஆம் தேதி காலை 9.20 நாகர்கோவில் சென்றடையும். மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து வரும் 12ஆம் தேதி மதியம் 12 மணிக்குப் புறப்பட்டு, நள்ளிரவு 12:05 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல் சென்னை சென்ட்ரல் – மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 11ஆம் தேதி மாலை 3 மணிக்குப் புறப்பட்டு, 12ஆம் தேதி காலை 5 மணிக்கு மதுரை சென்றடையும். மீண்டும் மதுரையில் இருந்து 12ஆம் தேதி இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, 13ஆம் தேதி காலை 9.20 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சாமல்பட்டி, பொம்முடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல் சென்னை எழும்பூர் – மதுரைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, எழும்பூரில் இருந்து 11ஆம் தேதி காலை 10.45 மணிக்கு இந்த ரயில் புறப்படும். அதேபோல் 11ஆம் தேதி மதுரையிலிருந்து இரவு 8.30 மணிக்குப் புறப்படும் மற்றொரு சிறப்பு ரயில் 12ஆம் தேதி காலை 4.40 மணிக்கு எழும்பூர் வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஜனவரி 10) காலை 8 மணிக்கு தொடங்கியது.
Read More : டெல்டா மாவட்டங்களுக்கு வார்னிங்..!! கனமழை வெளுத்து வாங்கப்போகுது..!! இந்த 5 மாவட்டங்கள் தான் டார்கெட்..!!