fbpx

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போறீங்களா..? அப்ப முதல்ல இதை படிங்க…

பொங்கல் பண்டிகைக்கான ரயில் சேவை முன்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது..

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி 14-ம் தேதி அல்லது ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.. எந்த பண்டிக்கு செல்லவில்லை என்றாலும், பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடவே அனைவரும் விரும்புவர்.. எனவே பணி நிமித்தமாக வெளியூர்களில் வசிக்கும் மக்கள், பொங்கல் பண்டிகைக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.. எனவே நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.. எனினும் ரயில் பயணத்திற்கு 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்..

அந்த வகையில் அடுத்த ஜனவரி 10-ம் தேதி ரயில்களில் பயணிப்பதற்கான டிக்கெட்டை இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.. ஜனவரி 11-ம் தேதிக்கான முன்பதிவு நாளையும், ஜனவரி 12, 13,14 ஆகிய நாட்களுக்கான முன்பதிவு அடுத்தடுத்த நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.. ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர், ஐஆர்சிடிசி இணையதளம் ஆகியவற்றில் பயணிகள் தங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்..

Maha

Next Post

பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை தன் வசமாக்கிய அரசர் சார்லஸ்..! சுவாரஸ்ய தகவல்..!

Mon Sep 12 , 2022
பிரிட்டன் அரசராக பொறுப்பேற்றுள்ள சார்லஸுக்கு, அரசர் என்ற பதவியை தாண்டி பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கட்டுப்படுத்தும் அதிகாரமும் வசமாகியுள்ளது. உலக வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர், பிரிட்டன் ராணி மறைந்த இரண்டாம் எலிசபெத். இதையடுத்து அவரது மகன் சார்லஸ், அரசராக தனது 75வது வயதில் பொறுப்பேற்றுள்ளார். அரசர் பொறுப்பை தாண்டி, வலுவான வர்த்தக கட்டமைப்பை கொண்ட தொழில் நிறுவனங்களின் லகானும், சார்லஸின் கைகளுக்கு வருகிறது. […]
பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை தன் வசமாக்கிய அரசர் சார்லஸ்..! சுவாரஸ்ய தகவல்..!

You May Like