fbpx

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவரா நீங்கள்? உங்க லிஸ்ட்டில் இந்த 3 ஹெல்தி லைஃப்ஸ்டைல் பின்பற்றுங்கள்!

ஆரோக்கியம் குறித்த செயல்பாடுகளில் கவனம் செலுத்துபவர்கள், மேலும் சில எளிய பழக்கவழக்க மாற்றங்களை பின்பற்றுவது குறித்து இதில் பார்க்கலாம்.

தினசரி ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதன் அவசியத்தை பலரும் புரிந்துகொண்டுள்ளனர். ஆனாலும் ஆரோக்கியம் குறித்த தீர்மானங்களை செயல்படுத்துவதில் பலர் தவறிவிடுகின்றனர். சில எளிய பழக்கவழக்க மாற்றங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.ஒவ்வொருவரும் அவரவர் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது 3 ஹெல்தி லைஃப்ஸ்டைல் செயல்படுத்த வழிவகுக்கும். முடிந்தவரை இயற்கை வடிவிலேயே உணவுகளை உண்ணுங்கள் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஜூஸாக குடிப்பதைவிட பழங்களை அப்படியே சாப்பிடலாம். முடிந்தவரை காய்கறிகளையும்கூட அரை வேக்காடகவே சாப்பிடலாம். முற்றிலும் சமைத்தோ, மசித்தோ மசாலாக்களை சேர்த்து சாப்பிடுவதைவிட இது சிறந்தது. காய்கறிகள் மற்றும் முட்டைகோஸ் போன்றவற்றை சுவைக்காக சமைத்து சாப்பிடும்போது அதில் சிறிது தேங்காயை சேர்ப்பது சிறந்தது. இல்லாவிட்டால் வெங்காயம், குடை மிளகாயையும் சேர்த்துக்கொள்ளலாம்.ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் இயக்கம் எவ்வளவு முக்கியம் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும். தினசரி குறைந்தது 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதனை தினசரி பழக்கமாக்கி கொள்வது சிறந்தது. கார்டியோ மற்றும் யோகா பயிற்சிகளை தவிர பிற உடற்பயிற்சிகளும் தேவை. எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் உடற்பயிற்சிகள் உடல் கட்டமைப்பை பராமரிக்க உதவும்.

சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளாததால் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகிறது. எனவே உணவு பழக்கங்களை முறையாக கடைபிடிக்க இயலாதவர்கள் வைட்டமின் ஏ, பி, சி, டி, இ மற்றும் ஜிங்க் போன்றவற்றை எடுத்துக்கொள்வது மிகமிக அவசியம் என அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள். ஆனால் அவை மருத்துவரின் பரிந்துரையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மறக்கவேண்டாம்.

Kokila

Next Post

அமைச்சரவை மாற்றம்...! டி.ஆர்.பி.ராஜா என்னும் நான்... இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி...!

Thu May 11 , 2023
ஆளுநர் மாளிகையில் இன்று அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்க உள்ளார். தமிழக பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், அமைச்சர்கள் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். முதல்வரின் மற்றொரு பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னார்குடியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சரவையில் சேர்க்க ஒப்புதல் அளித்தார். இன்று காலை 10.30 மணிக்கு ராஜ்பவனில் அமைச்சராக பதவியேற்பு விழா நடைபெறும் என நடைபெறும் என […]

You May Like