fbpx

நீங்கள் வாடகை வீட்டில் இருக்கீங்களா..? இந்த ரூல்ஸ் பற்றி கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்..!!

10 வருடம் ஒரு வீட்டில் குடியிருந்தால், அந்த வீடு வாடகைதாரருக்கு சொந்தமாகிவிடுமா? வாடகைதாரருக்கும் சட்டம் உள்ளதா? அந்த சட்டம் என்ன சொல்கிறது? எத்தனையோ பேர், தங்கள் குழந்தைகளின் படிப்புக்காகவும், வேலைக்காகவும், சொந்த ஊர்களை விட்டுவிட்டு வெளியூர்களில் குறிப்பாக பெருநகரங்களான சென்னை, கோவை போன்ற இடங்களில் குடியேறிவிட்டனர். இந்த குடியேற்றங்கள் இப்போதும் தொடர்ந்து வருகிறது. வாடகை வீடு என்றாலும்கூட, இதற்கும் சட்டங்கள் உள்ளன. சில உரிமைகளும் உள்ளன. இவைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

முதலில் வாடகைதாரரும், வீட்டு உரிமையாளரும் ஒப்பந்தப் பத்திரம் எழுதிக்கொள்வது அவசியம். வாடகை, பராமரிப்பு, கரண்ட் பில், அட்வான்ஸ் இப்படி எல்லாமே அந்த பத்திரத்தில் இருப்பதால் பெரிய சிக்கல் எழ இரு தரப்பிலுமே வாய்ப்பில்லை. வீட்டுக்கு வெள்ளையடிப்பது குறித்து கண்டிப்பாக இரு தரப்பிலும் பேசிக் கொள்ள வேண்டும். ரூ.20 முத்திரைத்தாளில் அங்கீகரிக்கப்பட்ட முத்திரை விற்பனையாளரிடம் வாங்கி, வாடகைதாரர் – உரிமையாளர் இருவருமே பத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும். 11 மாதத்திற்கு ஒருமுறை மறக்காமல் அதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஆனால், 11 மாத காலத்திற்கு மேற்பட்ட பத்திரப்பதிவுகளை, பத்திர ஆபீசில்தான் பதிவு செய்ய வேண்டும்ச்.

ஒப்பந்தம் முடிந்தும் அடுத்ததாக எந்த ஒரு ஒப்பந்தமும் போடவில்லை என்றாலும், வாடகைக்கு குடியிருப்பவர் தொடர்ந்து 6 மாதம் அந்த வீட்டில் குடியிருக்கலாம். அதேபோல வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டவர் துரதிர்ஷ்டவசமாக இறந்துபோகும் சமயத்தில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் ஒப்பந்தம் முடியும் வரை அந்த வீட்டில் தங்கிக்கொள்ளலாம்.

பத்திரங்கள் :

வாடகைக் கட்டணத்தை உயர்த்துவது குறித்தும், அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் பிரச்சனையே இல்லை. ஒருவேளை திடீர் வாடகை உயர்வில் வாடகைதாரருக்கு விருப்பம் இல்லாதபட்சத்தில் நீதிமன்றத்திற்கு சென்று முறையிடலாம். அதுபோல வீட்டு உரிமையாளரும், வாடகைக் கட்டணம் உயர்த்தும்போது வாடகைதாரர் ஒத்துக்கொள்ளாதபட்சத்தில், நீதிமன்றத்திற்கு சென்று முறையிடலாம். அப்போது, எதற்காக வீட்டு வாடகை உயர்த்தப்படுகிறது என்ற காரணத்தை தெளிவாக சொல்ல வேண்டும்.

வாடகை வீட்டில் ஒருவர் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட்டை உரிமை கோர சட்டத்தில் வழிமுறை இல்லை. ஆனால், 12 வருடங்களாக வாடகைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர, சட்டத்தில் வழியிருக்கிறது. உரிமையாளர் நினைத்ததுமே, வீட்டு வாடகைதாரரை காலி செய்ய வைக்க முடியாது. பத்திரத்தில் கையெழுத்தானபடி, குறிப்பிட்ட தேதிக்குள் வாடகையைச் செலுத்த தவறும்போது வேண்டுமானால் காலி செய்ய சொல்லலாம்.

அதேபோல, வாடகை தேதி, உரிய நேரத்தை தள்ளி போனால், 10 நாட்கள் கூடுதலாக காத்திருக்கலாம். இல்லாவிட்டால், அந்த வீட்டை ஓனர் காலி செய்ய சொல்லலாம். வீட்டை அதிகமாக சேதப்படுத்தியிருந்தாலும் காலிசெய்ய சொல்லலாம். சட்டவிரோதமான செயல்களுக்காக வீட்டை பயன்படுத்தினாலும் காலி செய்ய சொல்லலாம். வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு தொல்லைதரும்படி நடந்து கொண்டாலும் வீட்டை காலி செய்ய சொல்லலாம். வீட்டை உபயோகிக்காமல் 4 மாதங்களுக்கு மேல் பூட்டி வைத்திருந்தால் (மலைவாசஸ்தலங்களுக்குள இந்த விதிமுறை செல்லாது) காலி செய்ய சொல்லலாம்.

நோட்டீஸ் :

வாடகைக்கு ரசீது கொடுக்காவிட்டால், குடியிருப்பவர் ஆன்லைனில் வாடகை பணத்தை கொடுக்கலாம் அல்லது இரண்டு மாதத்துக்கு மணியார்டர் மூலமாக வாடகை அனுப்பலாம். அப்படியும் வீட்டின் உரிமையாளர் வாடகை ரசீது கொடுக்கவில்லை என்றால் வாடகை அதிகாரியிடம் சென்று குடியிருப்பவர் புகார் செய்யலாம். வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு குடியிருப்பவரின் வீட்டுக்குள் ஏதாவது ஒரு காரணத்துக்காகச் செல்ல வேண்டுமென்றால், 24 மணி நேரத்துக்கு முன்பாகக் குடியிருப்பவருக்கு ஒரு நோட்டீஸ் தர வேண்டும்.

ஜாக்கிரதை :

அதேசமயம், சில போலி புரோக்கர்கள் சென்னையின் புறநகரை வட்டமிடுவதால், இவர்களிடம் வாடகைக்கு வீடு தேடுவார் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளனர். காரணம், புறநகரில், அதாவது, பல்லாவரம், தாம்பரம், சிட்லப்பாக்கம், கூடுவாஞ்சேரி, வண்டலூர், பகுதிகளில், வீடு வாடகைக்கு உள்ளதாக சொல்லி, ஆன்லைனில், “அட்வான்ஸ் கமிஷன்” தொகையை வாங்கி கொள்வதாக புகார்கள் வெடித்துள்ளது. இதற்காக சில புரோக்கர்கள், கவர்ச்சிகரமான விளம்பரத்தையும் ஆன்லைனில் செய்துவிடுவதால், அவசரத்துக்கு வாடகைக்கு வீடு தேடுவோர், புரோக்கர்கள் கேட்கும் அட்வான்ஸ் பணத்தை ஆன்லைனில் செலுத்திவிடுகிறார்களாம். இவர்களிடம் விழிப்பாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்துள்ளன.

Chella

Next Post

வனிதாவுக்கு இந்த கெட்டப் பழக்கமும் இருக்கா..? வெளியாகிய புகைப்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!

Tue Jul 11 , 2023
இயக்குநர் நவீன் இயக்கத்தில் ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், உருவாகும் திரைப்படம் தான் ‘கடைசி தோட்டா’. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அதிரடி காவல்துறை அதிகாரியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். மேலும், ராதாரவி, ஸ்ரீகுமார், வையாபுரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். மர்டர் மிஸ்டரி ஜானரில் உருவாகும் இப்படத்தில் அதிரடியான காவல்துறை அதிகாரியாக வனிதா விஜயகுமார் நடிக்கின்றார். சுருட்டு பிடிக்கும் மிரட்டலான மற்றும் மிடுக்கான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருடைய இந்த […]
வனிதாவுக்கு இந்த கெட்டப் பழக்கமும் இருக்கா..? வெளியாகிய புகைப்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!

You May Like