சுகமான படுக்கை, மெத் மெத் என்று இருக்கும் தலையணையுடன் படுத்து தூங்குவது நல்ல தூக்கத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால், படுக்கையில் படுத்தாலும் தரை மீது படுத்தாலும் குப்புற கவிழ்ந்து படுப்பது உடலுக்கு அவ்வளவு நல்லது இல்லை., இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
குப்புற கவிழ்ந்து படுக்கும் போது, நமது தலை தலையணைக்குள் புதைந்துவிடும். அதனால் நாம் தலையை மட்டும் வலது அல்லது இடதுப் பக்கம் திருப்பி படுப்போம். இப்படி நீண்ட நேரம் படுத்திரு ந்தால், கழுத்துப் பகுதியில் எலும்பு திரும்பியே இருக்கும். இதனால் கழுத்து வலி மற்றும் முதுகெலும்பு சம்மந்தப்பட்ட சில மோசமான பிரச்னைகளும் ஏற்படக்கூடும். நீண்ட நாட்களாக இப்படி தூங்குபவர் களுக்கு “ஹெர்னியேடட் டிஸ்க்” என்கிற பிரச்சனை வரும்.
பல பெண்களுக்கு குப்புற படுக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் இப்படி தூங்குவது மார்பு வலியை ஏற்படுத்தும். குப்புற படுக்கும் போது, மார்பகத்தின் மீது அழுத்தம் ஏற்படுகிறது. இப்படி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் போது, அது வலியை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு மார்பகத்தில் வலி ஏற்பட்டால், முதலில் உடனே மருத்துவரை அணுகுங்கள். அதோடு இனிமேல் குப்புற படுக்கும் பழக்கத் தைக் கைவிடுங்கள்.
முழு இரவும் தலைகுப்புற படுத்துவிட்டு, காலையில் எழுந்து நீங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்தால் ஒரு மாற்றம் தெரியும். இரவு முழுவதும் தலையணையில் புதைந்துகொண்டு படுத்ததால், தலையணை படிப்பு முகத்தில் தெரியும். நெற்றி படிப்புகளில் பதிந்துவிடும். இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு முகம் வீக்கமடையும். தொடர்ந்து இப்படி படுத்து தூங்குவதால், மூக்கு மற்றும் நெற்றியின் தோலில் இருக்கும் இழுவை தன்மை மறைந்து சுருக்கங்கள் நிரந்தரமாக தங்கி விடும் வாய்ப்பும் உள்ளது. வயிற்றுப் பகுதியை தரை அல்லது படுக்கையில் கொண்டு படுப்பதால், நமது உடலில் முழு எடையும் வயிற்றுக்கு சென்றுவிடும். இதனால் முதுகெலும்பின் பொசிஷனில் மாறுபாடு ஏற்படுகிறது.
அதையடுத்து, முதுகெலும்பில் பாரம் அதிகரித்து, அதனால் ஏற்படும் பிரச்சனைகள் உடல் முழுவதையும் பாதிக்கச் செய்துவிடும். குப்புற படுப்பதால் நம்முடைய கழுத்தின் பொசிஷன் மாறிவிடுகிறது. இதனால் மூளைக்கு ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகள், கழுத்துப் பகுதியை அடையும் போது சுருங்கி விடுகிறது. இதனால் மூளைக்கு தமனிகள் வழியாக செல்லும் ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் குறைந்தளவில் மட்டுமே சென்றடைகிறது.
குப்புற படுத்து தூங்குவது முகத்தின் அழகை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, குப்புற படுத்து தூங்குவதால், முகச்சருமம் போதுமான ஆக்ஸிஜனை பெற முடியாமல் போய், சருமமானது சுருங்க தொடங்குகிறது. அதே வேளையில், படுக்கையில் உள்ள அழுக்குகள் முகத்தில் பட்டு, அதன் விளைவாக பருக்கள் அல்லது சரும சுருக்க பிரச்சனையை சந்திக்க நேரிடும். பெண்கள் கர்ப்ப காலத்தில் குப்புற படுத்து தூங்கக்கூடாது. அப்படி தூங்கினால், அது தாய்க்கு மட்டுமல்ல குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும். இதுமட்டுமின்றி, இக்காலத்தில் பெண்களால் சரியாக தூங்க முடியாது. ஆனால் கர்ப்பிணிகள் இம்மாதிரியான சூழ்நிலையில் வலது பக்கம் திரும்பி தூங்கு வதை விட, இடது பக்கமாக திரும்பி தூங்குவதே நல்லது.
தூங்குபோது மட்டுமில்லாமல், குப்புற படுத்துக் கொண்டே வேலை செய்வது, புத்தகம் படிப்பது, செல்போனில் வீடியோ பார்ப்பது உள்ளிட்டவர்களுக்கும் இதே பிரச்னைகள் ஏற்படக்கூடும். தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்யும் சூழல் உருவாகியுள்ள நிலையில், பலரும் குப்புற படுத்துக் கொண்டு பணிகளை மேற்கொள்வதை காண முடிகிறது. நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கையை விரும்புபவர்கள், ஆதலால் இனிமேல் தேவையில்லாமல் குப்புற கவிழ்ந்து படுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
Read More : நீங்க இந்த மாதிரி உடலுறவில் ஈடுபடுறீங்களா..? தொற்று நோய் பரவும் அபாயம்..!! இனி இதை ஃபாலோ பண்ணுங்க..!!