கல்யாணம் ஆன தம்பதியினருக்கு கரு தங்காமல் போவது ஒரு பெரிய கேள்வியாக இருக்கும். கருப்பையில் கரு தங்காமல் போகும் காரணங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இம்பிளான்டேசன் பெயிலியர் (Implantation Failure) காரணமாகத்தான் ஒரு கரு கருப்பையில் தங்காமல் போய் விடுகிறது. இம்பிளான்டேசன் என்பது ஆரோக்கியமான விந்து ஆகும். ஒரு ஆரோக்கியமான கருமுட்டையில் ஆரோக்கியமான விந்து சேருவதைத் தான் சரியான இம்பிளன்டேசன் என்று குறப்படுகின்றது. இந்த இம்பிளன்டேசன் நடைபெறுவதற்கு பல செயல்முறைகள் உள்ளது. அதாவது ஆண்களின் விந்தணுக்கள் கோடி அளவில் இருந்தாலும் ஒரே ஒரு விந்தணு மட்டும்தான் பெண்ணின் கருமுட்டையை அடைகிறது. மற்ற விந்தணுக்கள் எல்லாம் உட்டெரஸை(Uterus) சென்றடையும் வழியில் இறந்து விடுகிறது.
பெண்ணுறுப்பில் 50 சதவீத விந்தணுக்கள் இறந்துவிடுகிறது. இதையும் தாண்டி செல்லும் விந்தணுக்களை வெள்ளை அணுக்கள் கொன்று விடுகிறது. வெள்ளை அணுக்களையும் தாண்டி உள்ளே செல்லும் விந்தணுக்களை கருப்பை சளி சுரப்பில் கொன்று விடுகிறது. 100லிருந்து 200 விந்தணுக்கள் மட்டும் தான் கருக்குழாய்யை சென்று அடைகிறது. கருக் குழாயின் சுருங்கி விரியும் தன்மையால் விந்தணுவானது பாதுகாப்பாக கரு முட்டையை சென்று அடைகிறது. கருமுட்டை சென்று அடைந்த பிறகு இது கருவாக மாறுகிறது. இதைத் தான் இம்பிளன்டேசன் என்று அழைக்கின்றோம். அடுத்து கரு தங்காமல் போவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் அடிப்படையான 10 காரணங்களை பார்க்கலாம்.
ஒரு பெண்ணின் கருவில் ஆணின் விந்தணு சேரும்போது சரியான முறையில் குரோமோசோம் சேரவில்லை என்றால் கரு கலைப்பு ஏற்படும். பெண்ணின் கருவாய் பெரிதாக இருந்தால் உருவான கரு தங்காமல் கலைந்து விடும்.அதிக எடையுள்ள பொருள்களை நீங்கள் தூக்கினால் கரு கலைய வாய்ப்பு உள்ளது. தைராய்டு மற்றும் நீர்க்கட்டி அதிகமாக இருந்தால் கரு கலைந்து விடும். புகைப்பழக்கம், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை கொண்டிருந்தாலும் கரு கலைய வாய்ப்பு உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையோ அனுமதியோ இன்றி வேறு மருந்து எடுத்தாலும் கரு கலைந்துவிடும். மாதவிடாய் நாட்கள் 40 நாட்கள் கழிந்து உடலுறவு வைத்திருந்தாலும் கரு தங்காமல் போகும்.
மாதவிடாய் நாட்கள் முடிந்து அதிக அளவு சுவிட்ஸ் உண்டால் அது இரத்தப் போக்கை ஏற்படுத்தும். இதன் காரணமாக கூட கரு கலைந்து விடும். அது போல அதிக காரம், கேஸ் நிரம்பிய பொருள்கள் பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டாலும் கருச்சிதைவு ஏற்படும்.ஒரு பெண் கர்ப்பம் அடைந்த பிறகு சந்தோஷம் மற்றும் பயம் கலந்த உணர்வு ஏற்படும். அதனால் வயிற்று வலி ஏற்பட்டு இரத்தபோக்கு ஏற்படுவதால் கரு கலையக்கூடும். கர்ப்பம் அடைந்த பிறகு அதிக நேரம் கார், பஸ், பைக் போன்ற வாகனங்களில் செல்வதும் கரு கலைய முக்கிய காரணமாக உள்ளது.