இடது கை பழக்கம் கொண்டவர்கள் சமூகத்தால் சில நேரங்களில் கேலிக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். ஆனால் நீங்கள் தான் மற்றவர்களை விட அதிக புத்தியும் சக்தியும் கொண்டவர்கள். மேலும் இடது கை பழக்கம் உள்ளவர்களின் நமக்கு தெரியாத மிகவும் அற்புதமான தகவல்களை பற்றி பார்ப்போம். உலக மக்கள் தொகையில் சுமார் 10 லிருந்து 13% வரை இடது கை பழக்கம் உடையவர்கள்.
இடது கை பழக்கம் உள்ளவர்கள் ஒவ்வாமை, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு அதிகம் உள்ளாகிறார்கள். இடது கைக்கு “சவுத் பாவ்ஸ்” என்று செல்லப்பெயர் உண்டு. இடது கை பழக்கம் உள்ளவர்களில் பெரும்பாலோர் தூக்கமின்மை பிரச்சனை கொண்டவர்கள். இடது கை பழக்கம் கொண்ட மக்கள் தங்கள் மூளையின் வலது பக்கத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
இடதுகை பழக்கம் உள்ளவர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் மிகவும் பிரபலமான கண்டுபிடிப்பாளர்களாக இருக்கிறார்கள். உதாரணம் ஐசக் நியூட்டன் மற்றும் பெஞ்சமின் பிராங்க்ளின் போன்றவர்கள் இடது கை பழக்கம் உடையவர்கள்.மூளையின் வலது பக்கத்திற்கு சகிப்புத்தன்மை குறைவாக இருப்பதால் இடது கையை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் ஆல்கஹால் மீது பிரியமாக இருப்பார்கள்.
உலகில் இடது கை பழக்கம் கொண்ட பெண்களை விட ஆண்கள் அதிகம். இடது கை பழக்கம் உள்ளவர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் குணம் இயல்பாகவே இருக்கிறது. இடதுகை பழக்கம் கொண்டவர்கள் மிகச் சிறந்த கலைஞர்கள் இவர்கள் பெரும்பாலும் கிரியேட்டிவ் ஜாப் எனப்படும் படைப்புத் தொழிலை அதிகம் செய்கிறார்கள். அமெரிக்காவின் மிகவும் பிரபலமான ஜனாதிபதிகள் நான்கு பேர் இடது கை பழக்கம் கொண்டவர்கள்.சர்வதேச இடதுகை பழக்கம் கொண்டவர்கள் தினம் ஆகஸ்ட் 13 அன்று கொண்டாடப்படுகிறது.
இடது கை பழக்கம் கொண்ட மக்கள் நகங்களை வேகமாக வெட்ட வேண்டுமாம் ஏனெனில் இடது கையில் நகங்கள் வேகமாக வளருமாம். டென்னிஸ், நீச்சல், பேஸ்பால், குத்துச்சண்டை மற்றும் ஃபென்சிங் போன்ற பெரும்பாலான விளையாட்டுகளில் இடதுகை பழக்கம் கொண்டவர்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்களாம். இடது கை பழக்கம் கொண்டவர்கள் மற்றவர்களை விட வேகமாக வெட்கப்படுவார்கள், கோபப்படுவார்கள், சங்கடப்படுவார்கள். இடது கை பழக்கம் கொண்ட குழந்தைகள் பள்ளியில் வலது கை குழந்தைகள் அளவுக்கு செயல்திறன் கொண்டிருக்க மாட்டார்களாம்.
இடது கை பழக்கம் கொண்ட மக்கள் மத்தியில் மனநல பிரச்சனைகள் விரைவில் ஏற்படும். இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு அல்சர் மற்றும் கீல்வாதம் போன்ற வியாதிகளுடன் தொடர்புடைய அபாயங்கள் குறைவு. நாற்பது வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள் இடது கை பழக்கம் கொண்ட குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இடது கை பழக்கம் பரம்பரையாகவும் தொடர்ந்து வரும். இதற்கு சிறந்த உதாரணம் பிரிட்டிஷ் அரச குடும்பம். அங்கு குயீன் மதர், இரண்டாம் எலிசபெத் ராணி, இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் இடது கை பழக்கம் கொண்டவர்கள். முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளுக்கு இடது கை பழக்கம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு கேட்கும் உணர்வு அதிகம். நாய்கள் அதிகமாக இடதுகையைத் தான் பயன்படுத்துமாம். கிட்டத்தட்ட 50% நாய்கள் தங்கள் இடது பாதங்களை அதிகம் பயன்படுத்துகிறது. மேலும் நாய் மனிதர்களுக்கு கையை கொடுக்கும் பொழுதும் அதிகமாக இடது கையைத்தான் பயன்படுத்துமாம். அப்பல்லோ விண்வெளி வீரர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் இடது கை பழக்கம் கொண்டவர்கள். அப்பல்லோ விண்வெளி பயணத்தில் 29 விண்வெளி வீரர்களில் ஏழு பேர் இடது கை பழக்கம் கொண்டவர்கள்.