fbpx

பைக், கார் வாங்கும் ஆசையில் உள்ளீர்களா..? உங்களுக்கான அதிர்ச்சி செய்தி..!! ஏப்.1 முதல் அதிரடி விலை உயர்வு..!!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வர்த்தக வாகனங்களின் விலையை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்த டாடா மோட்டார்ஸ், மாருதி சுஜுகி, ஹோண்டா, ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. புதிய நிதியாண்டு முதல், இரண்டாம் கட்டமாக பிஎஸ்-6 புகை வெளியேற்ற கட்டுப்பாடு விதிகள் அமலுக்கு வர இருப்பதால் வாகனங்களின் விலையை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

மாருதி சுஜுகி (Maruti Suzuki): 

ஒட்டுமொத்த பணவீக்கம், ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றின் காரணமாக வாகனங்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், வர்த்தக வாகனங்களின் மிக சரியாக எவ்வளவு விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை அந்த நிறுவனம் கூறவில்லை. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வாகனங்களின் விலையை குறைக்க எங்கள் நிறுவனம் அதிகபட்ச முயற்சிகளை செய்தும் கூட, விலைவாசி உயர்வால் அதை தவிர்க்க இயலவில்லை’’ என்று கூறினார்.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors): 

வர்த்தக வாகனங்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்துவதற்கு இந்நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து டாடா நிறுவன அதிகாரி சைலேஷ் சந்திரா கூறுகையில், “எங்கள் வாகனங்களின் செயல்திறன் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றை மேம்படுத்தியுள்ளோம். அதேபோல மாசு கட்டுப்பாடு விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றியுள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.

ஹோண்டா (Honda): 

செடான் வகை கார்களுக்கு அடுத்த மாதம் முதல் ரூ.12 ஆயிரம் வரையில் விலையை உயர்த்துவதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாசு கட்டுப்பாடு விதிமுறைகள் மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்றவை தான் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் செடான் வகை கார்கள், நாட்டில் மொத்த வாகன எண்ணிக்கையில் 2.5 சதவீதமாக உள்ளது.

ஹீரோ மோட்டார்கார்ப் (Hero MotoCorp): 

பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2% வரை உயர்த்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. வாகனத்தில் இருந்து எவ்வளவு மாசுபாடு வெளியேறுகிறது என்பதை கண்காணிப்பதற்கான ரியல் டைம் சென்சார்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

மக்களே இது புதுவித மோசடி..!! இப்படியும் உங்களை ஏமாற்றலாம்..!! எச்சரிக்கையா இருங்க..!!

Tue Mar 28 , 2023
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களையும், விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வந்தாலும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடி செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சமீபத்தில் மும்பையை சேர்ந்த 81 பேரின் வங்கிக் கணக்கில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் காணாமல் போனது. விசாரணையில் யுபிஐ மூலம் ஒருவரின் கணக்கிற்கு தவறுதலாக அனுப்பப்பட்டதாக கூறி அனுப்பிய தொகையை […]

You May Like