fbpx

புதிதாக தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளீர்களா..? அப்படினா கண்டிப்பா இதை மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு (GST and E-way Billing (Advance) குறித்து இணையவழி பயிற்சி வழங்க உள்ளது. இப்பயிற்சியில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு, அடிப்படை கணக்கு விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை பயிற்றுவிக்கப்படும். இப்பயிற்சியில் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும்.

03.05.2023 தேதி முதல் 05.05.2023 ஆம் தேதி வரை 3 நாட்கள் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கு முன்பதிவு அவசியம் என்பதால் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பயிற்சி பற்றிய கூடுதல் தகவல்களை www.editn.in என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600032 ஆகும்.

Chella

Next Post

சென்னை ஐஐடியில் இன்று ஒருநாள் கருத்தரங்கம்...!

Tue May 2 , 2023
சென்னை ஐஐடியில் இன்று ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. சென்னை ஐஐடியின் தொழில் ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி (ஐசி & எஸ்ஆர்) அலுவலகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய பாதுகாப்பு அமைச்சத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் ராமானுஜம் மையமும் மற்றும் சென்னை ஐஐடியும் இணைந்து “அடுத்த தலைமுறைக்கான லேசர் அமைப்புகள்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை இன்று நடத்த ஏற்பாடு செய்துள்ளது. சென்னை ஐஐடியில் […]

You May Like