fbpx

ஊருக்கு போக ரெடி ஆகிட்டீங்களா..? இன்று முதல் தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்..!! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து சொந்த ஊர் திரும்பும் மக்களுக்காக சிறப்பு கட்டண ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் 10ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக இரவு 7.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நவம்பர் 11ஆம் தேதி மதியம் 2.45 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்டு குளித்துறை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் கண்ணூர் வழியாக காலை 5.15 மணிக்கு மங்களூர் சென்றடையும்.

நவம்பர் 12ஆம் தேதி மங்களூரில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் முறையில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் சென்னை எழும்பூர் வழியாக அதிகாலை 5.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Chella

Next Post

ரேஷன் அட்டைதாரர்களே..!! ஏமாந்துறாதீங்க..!! இந்த 2 நாட்களும் விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Fri Nov 10 , 2023
நவம்பர் 13 மற்றும் 25ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பல்வேறு தரப்பினரின் கோரிக்கையையும் ஏற்று தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 13ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் தீபாவளியை முன்னிட்டு அதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும் […]

You May Like