fbpx

அடிக்கடி பால் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்..? அதுவும் இந்த நேரத்தில் குடிக்கிறீங்களா..? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன..?

மாலை நேரத்தில் ஏன் டீ அருந்தக் கூடாது..? என்று நிபுணர்கள் தரும் விளக்கத்தை பார்க்கலாம்.

நீங்கள் டீ பிரியராக இருக்கலாம், நேரம் காலம் பார்க்காமல் டீ அருந்துபவராக இருக்கலாம். ஆனால் மாலை நேரத்தில் டீ அருந்தக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நாம் தூங்குவதற்கு 10 மணி நேரம் முன்பாகவே டீ மற்றும் காஃபைன் பானங்களை தவிர்த்து விட வேண்டும் என்று மருத்துவர் சவாலியா அறிவுறுத்துகிறார். நிம்மதியான தூக்கம், கல்லீரலில் நச்சுக்களை உடல் சுத்திகரிப்பது, அழற்சி தடுப்பு, ஆரோக்கியமான செரிமானம் ஆகியவற்றுக்கு இது உதவும் என்று அவர் தெரிவிக்கிறார்.

நம்மில் பலருக்கு பிளாக் டீ அருந்தும் பழக்கம் இருக்கிறது. பாலிஃபினால்ஸ் மற்றும் ஆண்டிஆக்ஸிடென்ட் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் செல்களின் சிதைவு மற்றும் அலர்ஜி போன்றவற்றை இது தடுக்கும். இருப்பினும் டீ என்றாலே அதில் பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பிரதானமாக இந்தியர்கள் சேர்த்துக் கொள்கின்றனர். இதனால் டீ யில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள் மாறுபடுகின்றன. அதன் முழுமையான பலன் நமக்கு கிடைப்பதில்லை.

இயல்பாக பார்த்தால் டீ லேசான கசப்பு சுவை கொண்டது. பால் மற்றும் சர்க்கரையை சேர்க்கும்போது இது இனிப்பு தன்மை கொண்டதாக மாறுகிறது. இதனால் சுவை மற்றும் தன்மை மாறுபட்டு விடுகிறது. டீயுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்க்கும்போது அதில் உள்ள ஆண்டிஆக்சிடென்ட் சத்துக்கள் மாறுபடுகின்றன. நேரடியாக டீ அருந்தும் போது கிடைக்கும் புத்துணர்ச்சியை காட்டிலும் பால் கலந்து குடிக்கும் போது குறைவான புத்துணர்ச்சியே நமக்கு கிடைக்கும்.

Read More : ’நோய் பாதிக்கப்பட்ட 48 மணி நேரம் வரை தான் உயிர் இருக்கும்’..!! இதுவரை 53 பேர் ரத்த வாந்தி எடுத்து மரணம்..!! எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு..!!

English Summary

Let’s see the explanation given by experts on why you shouldn’t drink tea in the evening..

Chella

Next Post

இந்த ஒரு பொருளை சாப்பிட்ட 2 மணிநேரத்தில், புற்றுநோய் செல்கள் அழியும்!!! கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..

Fri Feb 28 , 2025
garlic will kill the cancer cells

You May Like