fbpx

தரையில் படுத்து தூங்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்..? அப்படினா இந்த செய்தி உங்களுக்குத்தான்..!!

தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை கட்டாயம் உறங்க வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது பாதிக்கப்படும்போது உடலில் பல்வேறு விதமான நோய்களும் ஏற்படுகின்றன. சிலருக்கு கட்டிலில் படுத்தால் தான் தூக்கம் வரும் சிலருக்கு தரையில் படுத்தால் தூக்கம் வரும். இதில் எது நல்லது எது கெட்டது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக தரை மற்றும் மெத்தை அல்லது கட்டிலில் படுத்து உறங்குவதில் நன்மைகள் மற்றும் தீமைகள் இருக்கின்றன. குளிர் மற்றும் மழைக்காலங்களில் தரையில் தூங்கும்போது அதிகமான குளிரினால் ஜலதோஷம் மற்றும் உடல் வலி போன்றவை வர காரணமாக இருக்கும். மேலும் சுகாதாரம் மற்றும் தரையில் உறங்குவதன் மூலம் தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

இது போல் தரையில் படுத்து உறங்குவதால் பல நன்மைகளும் இருக்கின்றன. தீராத கழுத்து வலி உடையவர்கள் தரையில் படுத்து தலையணை இல்லாமல் உறங்கும் போது அவர்களது கழுத்து வலிக்கு சிறந்த தீர்வாக அமையும். மேலும் தரையில் படுத்து உறங்குவதற்கு முறையான விரிப்புகளை பயன்படுத்த வேண்டும் . கடுமையான உடல் வலி உடையவர்களும் தரையில் படுத்து உறங்கும்போது நல்ல உறக்கத்தை பெறலாம்.

சிலருக்கு முதுகு சரியான நிலையில் இல்லாமல் சற்று வளைந்து இருக்கும். அதுபோன்று இருப்பவர்கள் தரையில் படுத்து உறங்குவதால் அவர்களது வளைவுத்தன்மை நேர்த்தியாக வாய்ப்பு இருக்கிறது. எனினும் தரையில் படுத்து உறங்குவதற்கு முறையான குறிப்புகளை பயன்படுத்துவதே நன்மையை தரும். மேலும், தரையில் படுத்து உறங்குவது சுவாசப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.

Read More : போக்சோ வழக்கில் சிக்கிய 23 அரசுப் பள்ளி ஆசிரியர்களும் குற்றவாளிகள்..!! அதிரடியாக டிஸ்மிஸ் செய்த பள்ளிக்கல்வித்துறை..!!

English Summary

Some people fall asleep only when they lie in bed, while others fall asleep when they lie on the floor.

Chella

Next Post

காரணமே இல்லாமல் கால் பாதங்களில் வலியா..? அப்படினா சர்க்கரை நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்..!! அசால்ட்டா இருக்காதீங்க..!!

Wed Mar 12 , 2025
Medical experts have said that certain conditions that occur in the feet may be a sign that a person has diabetes.

You May Like