உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருப்பவர்கள் இந்த டையட்டை ஃபாலோ செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
உடல் எடை அதிகமாக இருந்தாலும் பிரச்சனை, எடை குறைவாக இருந்தாலும் பிரச்சனை. சீராக உடல் எடையை பராமரிப்பது தான் ஆரோக்கியம். அது என்ன சீரான உடல் எடை? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். சீரான எடை என்றால் உயரத்துக்கு ஏற்ற எடை இருந்தால் போதும். சிலர் உடல் எடையை கூட்டுவதற்கு ஏதோதோ முயற்சிகளை எல்லாம் எடுப்பார்கள். அவர்களில் ஒருவர் நீங்கள் என்றால், இயற்கையான இந்த டிப்ஸை ஃபாலோ செய்து விரைவாக உடல் எடையை கூட்டுங்கள்.
சீரகம் என்று அழைக்கப்படும் இந்த சமையல் பொருள் முக்கிய மூலிகையாக உள்ளது. நமது சமையலறைகளில் எப்போதும் கிடைக்கும் சீரகம், உணவின் சுவையை கூட்டுவதைத் தவிர, பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. சீரகத்தை ஒரே இரவில் தண்ணீரில் ஊற வைத்து, சீரகத் தண்ணீராக உட்கொள்வது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உடல் அதிகரித்து இருந்தால் எடை குறைக்க வேண்டும் என்று யோசிப்போம். ஆனால் தற்போது உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று தான் சிலர் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
அந்த வகையில் வீட்டில் இருந்தவாரே உடல் எடையை எவ்வாறு கூட்டலாம் என்று பார்க்கலாம்: தேவையான பொருட்கள்: சீரகம் – 1 தே.கரண்டி, அரிசி மா – 1/2 தே.கரண்டி, அஸ்வகந்தா பொடி – 1/2 தே.கரண்டி, பனங்கற்கண்டு – 1 தே.கரண்டி, தண்ணீர் – 2 டம்ளர். செய்முறை: முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து வடிக்கட்டி எடுக்க வேண்டும். வடிக்கட்டி எடுத்த சீரக தண்ணீருடன் அரிசி மா மற்றும் அஸ்வகந்தா பொடி சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். இறுதியாக பனங்கற்கண்டு சேர்த்து கலந்து எடுத்தால் பாணம் தயாராகிவிடும்.