fbpx

காலையில் எழும்போது மன அழுத்தத்துடனேயே இருக்கிறீர்களா? இந்த பழக்கங்களை ஃபாலோ பண்ணி பாருங்க..!!

உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை நன்றாக வைத்துக் கொள்ள அதிகாலை பழக்க வழக்கங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியமாக இருப்பதற்கு நீங்கள் பின்வரும் இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் செய்தாலே போதும்.

ஒவ்வொரு நாளும் இரவு பகல் என்று பிரிக்கப்பட்டு இருந்தாலும், நம் நாளில் அதிகாலை தான் மிகவும் முக்கியமானது. அதிகாலை பழக்க வழக்கங்கள் நம் ஆரோக்கியத்திற்கு பெரும் பலமாக அமைகிறது. காலை நேரத்தில் நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றினாலே அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதுவே தீய பழக்கங்களை பின்பற்றினால், உடல் நலம் கெட்டுவிடும். ஒவ்வொரு நாளும் நீங்கள் தூக்கத்தில் இருந்து எழும் போது ஒருவித மன அழுத்தத்துடனேயே இருக்கிறீர்களா? அப்படி என்றால், நீங்கள் உங்கள் காலை நேர பழக்க வழக்கங்களை ஆராய்ந்து பார்த்து மாற்றிக் கொள்வதற்கு இதுவே சரியான நேரம்.

தியானம் :

காலையில் எழுந்த உடனேயே முதல் விஷயமாக தியானம் செய்வது மிகவும் நல்லது. இது உங்கள் மன நிலையை மேம்படுத்தும். இது உங்கள் உடலையும், மனதையும் கட்டுப்படுத்துவதோடு உங்கள் கவனத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு ரிலேக்ஸ் செய்யவும் உதவும். உங்கள் எண்ணங்களை ஒழுங்குபடுத்தி, அன்றைய நாளை நன்றாக திட்டமிட உதவுகிறது. மொத்தத்தில், உங்கள் நாளை பயனுள்ளதாக மாற்ற தியானம் ஒரு சிறந்த வழி ஆகும்.

காலை நேர உணவு :

தினசரி காலையில் சீரான உணவை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். தினமும் காலையில், வெறும் வயிற்றில் நன்கு சமநிலையான, அதிக புரதம் கொண்ட காலை உணவை எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். கூடுதலாக, இது உங்கள் நாள் முழுவதுக்குமான ஆற்றலையும் ஊட்டச்சத்தையும் தருகிறது. அதனால், ஒரு போதும் உங்கள் காலை உணவை தவிர்த்து விடாதீர்கள்.

காலையில் சீக்கிரம் எழுவது :

காலையில் சீக்கிரம் எழுந்தாலே உங்கள் பதட்டம் சற்று குறைந்து விடும். அதிகாலையில் எழும் பழக்கம் உள்ளவர்கள் வணிகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஏற்படும் சிக்கல்களுக்கு பொறுப்பான தீர்வை எடுப்பவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி, நீங்கள் சீக்கிரமாக எழுவதால் உங்களுக்கான நேரமும் கிடைக்கும். இதன் விளைவாக, உங்களின் அதிகாலை நேரங்கள் பொதுவாக உங்களின் மிகவும் பயனுள்ள நேரங்களாகும். உங்கள் கவனம் சிதறாமல் இருக்கும். அதனால் எந்தச் செயலையும் விரைவாக உங்களால் முடிக்க முடியும்.

தினமும் யோகா :

யோகா ஒரு சிறந்த காலை பயிற்சி ஆகும். இது உங்கள் காலை நேரத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும். யோகா செய்வதால் உங்கள் நெகிழ்வுத்தன்மை, தோரணை, சமநிலை, தசை தொனி மற்றும் சகிப்புத்தன்மை அனைத்தும் மேம்படும். மேலும், யோகா மன, உடல் மற்றும் ஆன்மீக நன்மைகளையும் வழங்குகிறது. அதோடு, உங்கள் மனம் மற்றும் உடலையும் மேம்படுத்துகிறது.

பட்டியலை தயார் செய்யுங்கள் :

ஜிம்மிற்குச் செல்வது அல்லது மீட்டிங்கில் கலந்து கொள்வது போன்ற நீங்கள் ஒவ்வொரு நாளும் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை உள்ளடக்கிய பட்டியலை உருவாக்க வேண்டும். உங்கள் நாளின் பெரும்பகுதியைத் திட்டமிட உதவும். அனைத்தையும் முன்பே திட்டமிடுவது உங்கள் நாள் முழுவதையும் சரிவர பயன்படுத்திக் கொள்ள உதவும்.

Chella

Next Post

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! சம்பளம் ரூ.43,000 வரை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Thu Apr 27 , 2023
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பதவி: கால்நடை மருத்துவ ஆலோசகர் கல்வித்தகுதி: கால்நடை மருத்துவ படிப்பு B.V.SC & A.H, கணினி அறிவு இருக்க வேண்டும். கண்டிப்பாக இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கணினி செயல்திறன் அறிவு பெற்றிருக்க வேண்டும். கிராமப்புற […]

You May Like