fbpx

’உயர்கல்வி பயிலாத மாணவர்களா நீங்கள்’..? ’உங்களின் விவரங்களை அரசு கேட்கிறது’..!!

உயர்கல்வி பயிலாத மாணவர்களின் விவரங்களை அனுப்ப மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களில் 8,588 பேர் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர்கள் எந்தவித உயர்கல்வி படிப்புகளிலும் சேரவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதனால், உயர்கல்வி பயிலாத மாணவர்களின் விவரங்களை அந்தந்த பள்ளி நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அந்த மாணவர்களை தனித்தனியே தொடர்பு கொண்டு அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை வழங்குவதற்காகவே விவரம் சேகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

’உயர்கல்வி பயிலாத மாணவர்களா நீங்கள்’..? ’உங்களின் விவரங்களை அரசு கேட்கிறது’..!!

மாணவர்களின் செல்போன் எண், மதிப்பெண், முகவரி உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வி சேராமல் மாணவர்கள் வேலைக்கு சென்றிருக்கலாம் என்பதால் அவர்களை கண்டறிந்து உயர்கல்வியில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Chella

Next Post

பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் அபராதம்... தரமற்ற குக்கர்கள் விற்பனை செய்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு..!!

Fri Sep 23 , 2022
வாடிக்கையாளர்களின் உரிமைகளை மீறும் வகையிலும், நிர்ணயிக்கப்பட்டுள்ள தரச் சான்று விதிமுறைகளை பூர்த்தி செய்யாமல் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பிரஷர் குக்கர்களை விற்பனை செய்ய அனுமதித்ததற்காக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராத தொகையை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் விதித்தது. மேலும், பிளிப்கார்ட் நிறுவனத்தில் விற்கப்படும் 598 பிரஷர் குக்கர்களைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அந்த பிரஷர் குக்கர்களை திரும்ப பெற்றுக் […]

You May Like