ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
இன்று பெரும்பாலானோருக்கு ஆஸ்துமா பிரச்சனை காணப்படுகிறது. இந்த பிரச்னை உள்ளவர்கள் இருமல், மார்பில் இறுக்கம், மூச்சுத்திணறல், மூச்சுக்குழாய் குழாய்களின் வீக்கம் போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்க சரியான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம்.ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடுவதிலும், குடிப்பதிலும் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். சில உணவுகளை உண்பதால் நுரையீரல் அழற்சி மற்றும் சுவாசக்குழாய் தொற்று ஏற்படலாம். இதனால் சுவாசிப்பதில் அதிக சிரமம் ஏற்படலாம். அதனால்தான் கீழே குறிப்பிட்டுள்ள சில உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஆஸ்துமா நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: பூண்டு, குளிர்ச்சியான உணவு பொருட்கள், பால் அல்லது பாலில் செய்யப்பட்ட எதையும் சாப்பிடவே கூடாது. மீன், மது, பாஸ்ட் புட் உணவுகள்,இறைச்சி ஆகியவைகளை சாப்பிடக்கூடாது.ஆஸ்துமா நோயாளிகள் மது அருந்தக்கூடாது. நீங்கள் மது அருந்தினால், அது உங்கள் இரத்த அழுத்தத்தையும், உடல் பருமனையும் அதிகரிக்கும். இதன் காரணமாக அதிகப்படியான கொழுப்பு, சுவாச பிரச்சனைகளை அதிகரிக்கும். ஆஸ்துமா நோயாளிகள் பொறித்த இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இனிப்பு சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் அதிக சோடியம் மற்றும் பல இரசாயனங்கள் உள்ளன. இது ஒவ்வாமை மற்றும் தொற்றுநோயாக மாறும். எனவே ஆஸ்துமா பிரச்சனைகள் உள்ளவர்கள் உணவு விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.