fbpx

இரவில் மொபைல் பார்த்துவிட்டு பகலில் அதிகம் தூங்குபவரா நீங்கள்!… ஆயுட்காலம் குறையும் ஆபத்து!…

இரவு நேரத்தில் 10 மணிக்கு மேல் மொபைல் பார்த்துவிட்டு பகலில் தூங்கினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து ஆயுட்காலம் குறையும் ஆபத்து ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒரு நாளில் 6 மணி நேரத்துக்கும் அதிகமான நேரத்தை செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் கழிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. குறிப்பாக, படுக்கைக்கு செல்லும் முன்பு, அன்றைய தினம் செல்போனில் வந்து குவிந்துள்ள வாட்ஸ்-அப் செய்திகளையும், வீடியோக்களையும் பார்க்க, மெசேஜ்களுக்கு பதில் அளிக்க நீண்ட நேரத்தை விரயமாக்குகிறார்கள். நீல நிற ஒளிக்கதிர்களின் தாக்குதலால், செல்போன் பயன்படுத்துபவர்களின் உடலில் மெலடோனின் சுரப்பது குறைய தொடங்குகிறது. அதன்விளைவாக அவர்கள் இரவு நேரத்தில் தூக்கம் வரமால் நீண்ட நேரம் அவதியடைய நேரிடுகிறது.

செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் இருந்து வெளிப்படும் நீலநிற ஒளிக்கதிர்களும் மெலடோனின் சுரப்பதை பாதிக்கும் காரணியாக விளங்குகிறது. இதனால், இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்லும் முன்பு நீலநிற ஒளி நிறைந்த அறையில் அதிக நேரம் செலவழிப்பது ஆழ்ந்த உறக்கத்துக்கு தடையாக அமைந்துவிடுகிறது. சரியாக தூங்காமல் செல்போன் பயன்படுத்துக்கிறீர்கள் அல்லது வேலை செய்கிறீர்கள் என்றால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரும்.

இரவு நேரத்தில் அதிக நேரம் செல்போன் பார்த்துவிட்டு பகல் நேரங்களில் அதிகம் தூங்கினால், சரியான தூக்கத்தை உடல் ஏற்றுக்கொள்ளாது. தொடர்ந்து இதுமாதிரி செய்துவந்தால், புற்றுநோய் வரும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொஞ்சம் கொஞ்சமாக ஆயுட்காலம் குறையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Kokila

Next Post

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஹெல்தி ஜூஸ்!... வாரம் 2 முறை குடித்தால் போதும்!... தயாரிக்கும் முறை இதோ!

Mon Feb 27 , 2023
புற்றுநோய் செல்களை வளரவிடாமல் அழிக்கும் இந்த ஹெல்தி ஜூஸை தயாரிப்பது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். புற்றுநோய்க்கு ஏராளமான சிகிச்சைகள் வந்தாலும் புற்றுநோயின் தாக்கத்தை சரியான நேரத்தில் கண்டறியப் படாமல் போவதால் அதிக இறப்புகள் உண்டாகின்றன. வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் ஆகியவற்றின் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி புற்றுநோயை தடுக்கவும் தவிர்க்கவும் செய்ய முடியும்.புகைப்பிடிப்பதை தவிர்ப்பது, சன் ஸ்கிரீன் முறையாக அணிவது, ஊட்டச்சத்துக்கள் குறைபாடு உண்டாகாமல் […]

You May Like