fbpx

செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவரா நீங்கள்..? 1,040 பேர் உயிரிழப்பு..!! மத்திய அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

சாலை விபத்துகளில் ஒரே ஆண்டில் 1 லட்சத்து 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். அவற்றிற்கு மத்திய அரசு புள்ளி விவரங்களுடன் பதிலளித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளதாக வெளியான அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், ”கடந்த 2021ஆம் ஆண்டு மொத்தம் 4,12,432 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 1,53,972 பேர் உயிரிழந்தனர். 3 லட்சத்து 84 ஆயிரத்து 448 பேர் காயமடைந்தனர். அதிவேகமாக வாகனங்களை இயக்கியது, குடிபோதை மற்றும் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் போன்றவைகளால் 1,28,825 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதில், 56 ஆயிரத்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிவேகமாக வாகனங்களை இயக்கியபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 40,450 பேரும், செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்கியதால் 1,040 பேரும் உயிரிழந்தனர். சாலை சிக்னல்களில் ஏற்பட்ட சில கோளாறுகளால் 555 விபத்துகள் ஏற்பட்டு, 222 பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் உள்ள குழிகள் காரணமாக 3,625 விபத்துகள் ஏற்பட்டு, அதில் ஆயிரத்து 481 பேர் உயிரிழந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு எச்சரிக்கை :

வாகனம் ஓட்டும் போது செல்போன்கள் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசியபடி போது பிடிபட்டால், ரூ. 5000 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அந்த அபராதத் தொகை ரூ.1000 ஆக இருந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டில் அது 5 மடங்கு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

ஓடும் ரயிலில் மாணவிகளை பார்த்து சுய இன்பம் செய்த நபர்..!! வீடியோ எடுத்து போலீசிடம் மாட்டிவிட்ட ஷாக்கிங் சம்பவம்..!!

Fri Aug 4 , 2023
ஓடும் ரயிலில் மாணவிகளிடம் ஆபாச செயலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கேரளாவில் கோவை – மங்களூர் இன்டர்சிட்டி ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த மாணவிகளிடம் எதிரே அமர்ந்திருந்த நபர், ஆபாச செயலில் செயல்பட்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள், தங்களது செல்போனில் அதனை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், அந்த நபரிடம் மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த நபரை சக பயணிகள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். […]

You May Like