fbpx

புதுசு புதுசா யோசிக்குறாங்கயா?… அது என்ன தற்கொலை மோசடி!… சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை!

மருத்துவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்து தற்கொலை மோசடி அரங்கேற்றப்படுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சைபர் கிரைம் எனும் இணையவழி குற்றங்கள் நாளுக்கு நாள் பல வழிகளில் அதிகரிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல தரப்பிலிருந்து மக்களுக்கு தொடர்ந்து பல அறிவுறுத்தல்கள் வழங்கபட்டாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது மருத்துவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்து தற்கொலை மோசடி அரங்கேற தொடங்கியுள்ளது. நேர்காணல் எனும் பெயரில் வீடியோ காலில் அழைத்து பெண் ஒருவர் பேசுவார்.

சில நிமிடங்களில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறி காவலர் பேசுவது போல மோசடி கும்பல் மிரட்டி பணம் பறித்து வருகிறார்கள். இதில் பாதிக்கப்பட்ட இரண்டு மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடியில் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

ஆதார் மூலம் பணம் திருட்டு!… ஆதார் அட்டை பயன்பாட்டு வரலாற்றை எவ்வாறு சரிபார்க்கலாம்?… முழுவிவரம் இதோ!

Sun Sep 3 , 2023
ஆதார் மூலம் பணத்தை திருடுவது உள்ளிட்ட மோசடிகளை தவிர்க்க அதன் பயன்பாட்டு வரலாற்றை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆதார் மூலம் பணத்தை திருடும் கும்பல் அதிகரித்து வருவதாக ஆதார் அமைப்பு எச்சரிக்கை […]

You May Like