fbpx

100 யூனிட் இலவச மின்சாரத்தை இப்படி பயன்படுத்துறீங்களா..? ஸ்பாட்டுக்கு வரும் அதிகாரிகள்..!! மக்களே உஷார்..!!

தமிழ்நாடு அரசு வழங்கும் 100 யூனிட் மானியத்தை யார் யார் தவறாக பெறுகிறார்களோ, அவர்களை கண்டறியும் பணியை தமிழக மின்வாரியம் துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில், 60 லட்சம் பேர் 100 யூனிட்டுக்குள் அடங்குவார்கள். குடியிருப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதேபோல, விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், கடந்த வாரம் திடீரென ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ”ஒரே பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருக்கும் பட்சத்தில், அவை ஒரே இணைப்பாக இணைக்கப்படும். பிறகு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும்” என்ற தகவல் பரவி வந்தது. இந்த விவகாரம் மின்வாரியத்தின் கவனத்துக்கு சென்றதையடுத்து, இந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று மின்வாரியம் தெரிவித்திருக்கிறது.

அதாவது, “வீட்டு பயன்பாட்டுக்கென மின் இணைப்பு பெற்று, அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொதுப்பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சி காரணமாக, 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள், வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை. 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது” என்று தெரிவித்துள்ளது.

அந்தவகையில், விதிமுறைகளுக்கு எதிராக பொதுப்பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை கண்டறியும் பணியை மின்துறை துவங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. 100 யூனிட் இலவச மின்சாரம் கூடுதலாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, ஒரே வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதனை கண்டுபிடிக்கவே, தமிழக மின்வாரியம் இந்த அதிரடியை கையில் எடுத்துள்ளது. ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக இருக்கும் பட்சத்தில் தனித்தனி பெயரில் மின் இணைப்புகள் இருந்தால், அதற்கு 100 யூனிட் கிடைக்கும்.

ஆனால் அந்த வீட்டிலேயே, ஒருவர் பெயரில், இரண்டுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால் அதை ஒரு மீட்டராக கருதி 100 யூனிட் மானியம்தான் வழங்கப்படும். அதற்காகவே, வீடு வீடாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது. மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கும் 100 யூனிட் மானியத்தை யார் யார் தவறாக பெறுகிறார்களோ, அதை கண்டறிந்து நிறுத்துவதற்காகவே, இந்த ஆய்வு தொடங்கியுள்ளதாம்.

Read More : Ujani Dam | அணையில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி..? உடலை தேடும் பணி தீவிரம்..!!

English Summary

It has been reported that the Tamil Nadu Power Board has started the process of identifying those who are wrongly receiving the 100 unit subsidy provided by the Tamil Nadu government.

Chella

Next Post

'90 நிமிடங்களில் ரூ.48,000 பில்!' 200 Km வேகத்தில் சீறிய போர்ஷே கார்! 2 பேர் பலி.. நடந்தது என்ன?

Wed May 22 , 2024
புனேவில் நடந்த சாலை விபத்தில் 17 வயது சிறுவன் மது போதையில் சொகுசு காரில் அதிவேகமான சென்று மோதியதில் இரண்டு ஐடி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணமாக அந்த 17 வயது சிறுவன் சம்பவம் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அப்போது அந்த சிறுவனுக்கு நிபந்தனையாக 15 நாட்கள் எர்வாடா போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்றும், சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் […]

You May Like