fbpx

ரொம்ப டென்ஷன் ஆகுதா?… மன வலிமையை பெற வேண்டுமா?… அப்ப நீங்க கட்டாயம் இத படிங்க!…

வேலைப் பளு, குடும்ப சூழ்நிலை காரணமாக அதிகமாக டென்ஷன் ஆவதால் எதிர்மறையான சிந்தனைகள் ஏற்படுவதை தடுக்கும் வழிகள் சிலவற்றை இதில் பார்க்கலாம்.

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் எல்லா நாட்களும் நமக்கான நாட்களாக அமைவதில்லை. சில நாட்கள் மகிழ்ச்சியை தரும். சில நாட்கள் கஷ்டத்தை தரும். குறிப்பாக தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் படும் கஷ்டத்தை பற்றி நம்மால் சொல்லவே முடியாது. அவர்களுக்கு அனைத்து நாட்களும் கசப்பான நாட்களாகவே இருக்கும். அதிகமான வேலைப் பளு, குடும்ப சூழ்நிலை மற்றும் வேலையில் முழு ஈடுபாட்டுடன் இருக்க முடியாத நிலை போன்றவை ஏற்படும்போது நம்மை அறியாமல் பல எண்ணங்கள் நமக்கு தோன்றும். இதனை தவிர்ப்பதற்கு சில எளிய பழக்கவழக்கங்களை மேற்கொண்டால் நாம் இழந்த மன வலிமையை திரும்பப் பெறலாம்.

உங்கள் வேலையில் சில நாட்களில் நீங்கள் பாராட்டுகளையும், சிறப்பாக செயலாற்றி உள்ளீர்கள் என்ற பெருமையையும் பெற்றிருக்கலாம். உங்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும் நேரத்தில் அதை நினைத்துக் கொண்டால் தற்காலிக திருப்தியை வழங்கும். உங்கள் லேப்டாப்பில் அல்லது பணியாற்றும் இடங்களில் பாசிட்டிவான உணர்வை தரக்கூடிய போஸ்டர்களை ஒட்டி வைத்தல் மிகவும் நல்லது. பணியிடங்களில் மனசோர்வு அதிகமாக இருக்கும்போது போல்டரில் உள்ள பாராட்டு பத்திரங்களை வாசிக்கும் போது உங்கள் மனதில் ஒரு சந்தோசம் ஏற்படும். அந்த போல்டர் உங்கள் நிறுவனத்தின் உயரதிகாரி உங்களுக்கு வழங்கிய பாராட்டாக இருக்கலாம், அல்லது சக ஊழியர்கள் உங்களுக்கு தெரிவித்த அன்பு பரிசு அல்லது பாராட்ட இருக்கலாம்.

உங்கள் வேலையில் நீங்கள் நம்பிக்கை இல்லாமல் இருக்கும்போது பாசிட்டிவ் எண்ணத்தை எப்பொழுதும் தோற்றுவிக்க வேண்டும். அது மனதில் ஒரு வித புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உங்களை முன்னோக்கி செல்ல வழிவகுக்கும். பணி என்றால் ஆயிரம் விமர்சனம் வரும். நீங்கள் நல்லதையே செய்தாலும் அதை சிலர்கள் கெட்டதாக எண்ணி உங்களுக்கு எதிராக சில விஷயங்களை செய்யத்தான் செய்வார்கள். அப்படிப்பட்டவர்களை நீங்கள் ஒதுக்கி வையுங்கள் அவர்களைப்பற்றிய எண்ணங்களை உங்கள் நினைவில் இருந்து அகற்றி விடுங்கள். அது உங்களுக்கு நன்மையை தரும்.

நீங்கள் சார்ந்த துறையில் வளர்வதற்கு நீங்கள் நெகட்டிவ் கருத்துக்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், உங்கள் பணி சிறக்க பாசிட்டிவ் கருத்துக்களை மற்றும் மனதில் கொண்டு உங்கள் இலக்கை நோக்கிப் பயணம் செய்யுங்கள்.ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் போது நமக்கு மேல் இருக்கும் ஆபீசர்கள் நம்மிடையே கோபத்தையும் வெளிப்படுத்தி இருப்பார்கள், அதேசமயம் பாராட்டையும் கொடுத்திருப்பார்கள்.

அந்தக் கோபத்தை கருத்தில் கொள்ளாமல் அவர்கள் நமக்கு அளித்த பாராட்டை மனதில் கொண்டு உங்கள் இலக்கை நோக்கி பயணம் செய்யுங்கள். அவ்வாறு செய்யும் போது உங்களுக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வரும். அது உங்களை உங்கள் இலக்கை நோக்கி செலுத்த உந்துசக்தியாக அமையும். முடிந்த அளவுக்கு பாசிட்டிவாக இருக்கும் பொருள்களை நாம் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளுவது நமக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும்.

Kokila

Next Post

சர்க்கரை நோயால் காலில் உள்ள புண் ஆறவில்லையா?... கவலையே வேண்டாம்!... நிரந்தர தீர்வு இதோ!

Fri Apr 28 , 2023
சர்க்கரை நோயால் காலில் ஏற்படும் புண்ணை இயற்கை மருத்துவ முறையில் ஆறவைக்க சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் பலரும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். சர்க்கரை நோய்க்கு கண்ட கண்ட மருந்துகளை சாப்பிட்டு வரும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சர்க்கரை நோயினால் சிலருக்கு கால்களில் புண் ஏற்பட்டு விரல்களை இழக்கும் சூழலும் ஏற்படுகிறது. நாளடைவில் காலை எடுக்கும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு ஏற்படும் இந்த புண்ணை ஆற்ற […]

You May Like