தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளனர். அதற்கான பொது கலந்தாய்வு தமிழக பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வரும் நிலையில், இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட இயக்குனரின் செயல்முறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட கலந்தாய்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிட மாறுதல் தற்காலிக பகுதி நேர ஆசிரியர்களின் விருப்பத்தின்படி நடைபெறுவதால் அவர்களுக்கு மாறுதல் பயணப்படிகள் வழங்கப்படாது. ஒரே பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடம் மாறுவதாக கூறினால், சில குறிப்பிட்ட தரவுகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.