fbpx

நடிகராக அறிமுகமானார் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி!…

அர்ஜென்டினா நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

லத்தின் அமெரிக்காவில் ஜூன் 25ம் தேதி ஸ்டார் பிளஸ்-ல் ஒளிபரப்பப்பட்ட அர்ஜென்டினாவின் நகைச்சுவை நாடக நிகழ்ச்சியான ‘லாஸ் ப்ரொடெக்டர்ஸ்’ இரண்டாவது சீசனில் அர்ஜென்டினா நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி நடித்துள்ளார். இந்த தொடரில் பல ஐரோப்பிய கிளப்புகளில் போட்டியிடும் இளம் வீரர்களை ஆதரிப்பதற்கான ஒரு திட்டத்தைப் பற்றி விவாதிக்கும் ஒரு ஐந்து நிமிடக் காட்சியில், கால்பந்து வீரராக மெஸ்ஸி நடித்துள்ளார். மெஸ்ஸியின் நடிப்பு இந்நிகழ்ச்சியின் ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த லாஸ் ப்ரொடெக்டர்ஸ் தொடரை ஸ்டார்+ பிளாட்ஃபார்மில் பார்க்கலாம் மேலும் இது 6.5 ஐஎம்டிபி ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. மேலும், லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப்பில் இணைய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர்!... புறக்கணித்தால் பாகிஸ்தான் நீக்கம்!... வேறு அணிக்கு வாய்ப்பு!... ஐசிசி அதிரடி முடிவு!

Fri Jun 30 , 2023
உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்காவிட்டால், பிளான்-B-யில் வேறு அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ஐசிசி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் 2011க்கு பிறகு, இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ள முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பையில் 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. […]

You May Like