fbpx

அறிஞர் அண்ணா பிறந்தநாள்..!! 127 காவலர்களுக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இந்தாண்டு காவல்துறையில் தலைமைக் காவலர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் சிறை கண்காணிப்பாளர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் மாவட்ட அலுவலர் வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படைவீரர் முதல் படைதளபதி வரையிலான 4 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் 2 அலுவலர்கள் துணை இயக்குநர் மற்றும் அறிவியல் அலுவலர் ஆகியோருக்கு “தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்கள்” வழங்கிட முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சாயல்குடி காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில், கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொள்ளை குற்றவாளிகளை 25.03.2022 அன்று கைது செய்யும் பணியில் ஈடுபட்டபோது கே.நவநீத கிருஷ்ணன், உதவி ஆய்வாளர், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு, ராமநாதபுரம் மாவட்டம் எதிரிகளால் கடுமையாக தாக்கப்பட்டும் சற்றும் தளர்வில்லாமல் தனது தைரியச் செயலினால் இரண்டு எதிரிகளையும் கைது செய்ய உதவியாக இருந்துள்ளார்.

இந்த தாக்குதலில் தலைமைக் காவலர் கருப்பசாமி என்பவரின் உயிரை காப்பாற்ற மிகவும் உதவியாக இருந்துள்ளார். கே.நவநீத கிருஷ்ணன், உதவி ஆய்வாளரின் துணிச்சலையும், செயலையும் பாராட்டி அவருக்கு காவல்துறையின் வீரதீர செயலுக்கான “தமிழக முதல்வரின் அண்ணா பதக்கம்” வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். மேற்கண்ட பதக்கங்கள் தமிழக முதல்வரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அந்தரங்க ஃபோட்டோவால் ஐஏஎஸ்-ஐ அலறவிட்ட ஐபிஎஸ்..!! மீண்டும் களத்தில் இறங்கிய ரூபா..!! ஞாபகம் இருக்கா..?

Fri Sep 15 , 2023
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரியின் அந்தரங்க புகைப்படங்களை ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு அடுக்கடுக்கான புகார்களை கூறி பரபரப்பை கிளப்பினார். இதையடுத்து, இருவரும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது 7 மாதங்களுக்கு பிறகு புதிய பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரூபா. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு பரபரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது அவரிடம் ரூ.1 […]

You May Like