fbpx

ரயில் விபத்தை தடுக்கும் கவச் பிரேக்கிங் சிஸ்டம் சோதனை வெற்றி!… சிக்னலுக்கு 30 மீட்டருக்கு முன்பே தானாக நின்றுவிடும்!

ரயில் விபத்துகளை தடுக்கும் வகையில், கவச்’ தானியங்கி, ‘பிரேக்கிங் சிஸ்டம்’ செயல்திறனின் பரிசோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக மத்திய வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விமான விபத்துகளை போன்று, ரயில் விபத்துகளும் மிகவும் அரிதாக நடக்கின்றன. ஆனால், அந்த அளவிற்கு மிகவும் அரிதாக கூட ரயில் விபத்துகள் நடந்துவிட கூடாது என்பதுதான் நம் விருப்பம். அதுமட்டுமின்றி, விமான விபத்துகளை போல் ரயில் விபத்துகளும் ஒருமுறை நடந்தாலும் கொத்தாக உயிரிழப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.

அதாவது, கடந்த ஆண்டு ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 295 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த ரயில் விபத்துகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளும் கருத்துகளும் எழுந்தன. அதாவது, மனித தவறால் இவ்விபத்து நடைபெற்றதாகவும், சிக்னல் கோளாறு மற்றும் விபத்து நடைபெற்ற ரயில்களின் இன்ஜின்களில் கவச் தொழில்நுட்பம் இல்லாததே விபத்துக்கு காரணம் என்று பல்வேறு விமர்சனங்கள் கூறப்பட்டது. இருப்பினும், கவச் தொழில்நுட்பம் ரயில் விபத்துகளை தடுக்க இந்தியன் ரயில்வே தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த ஆராய்ச்சிகளின் விளைவாக கண்டுப்பிடிக்கப்பட்டதே கவச் ஆகும். இது ஒரு ஆட்டோமேட்டிக் டிரெயின் புரோடெக்‌ஷன் சிஸ்டம் ஆகும்.

அதாவது, விபத்து நிகழும் சூழல் ஏற்பட்டால் தன்னிச்சையாக ரயிலை விபத்தில் இருந்து காப்பாற்றுவது கவச் சிஸ்டத்தின் பணி ஆகும். இந்த கண்டுப்பிடிப்பை முழுக்க முழுக்க இந்தியன் ரயில்வே பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உருவாக்கி உள்ளது. இந்த கண்டுப்பிடிப்பிற்கான ஆராய்ச்சிகள் ரயில் மோதல் தடுப்பு சிஸ்டம் (TCAS) என்ற பெயரில் 2012இல் துவங்கப்பட்டது.

ஆனால், இந்த ஆராய்ச்சிகள் முழுமையாக கடந்த 2022இல் தான் நிறைவடைந்தன. அதாவது, சுமார் 10 வருட கால ஆராய்ச்சிகளின் வெளிப்பாடே தற்போது இந்தியன் ரயில்களில் இருக்கும் கவச் சிஸ்டம் ஆகும். ஆனால், இன்னுமும் சோதனைகள் முழுமையாக நிறைவடையவில்லை. இந்த வகையில், மத்திய வடக்கு இரயில்வே, கவச் சிஸ்டத்தை கொண்ட ரயிலை மணிக்கு 160kmph வேகத்தில் இயக்கி சோதனை செய்து பார்த்துள்ளது.

சிக்னலை அறிந்து ரயிலுக்கு கவச் எந்த அளவிற்கு துல்லியமாக பிரேக்கை வழங்குகிறது என்பதை கண்டறியும் விதமாக இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதாவது, சிக்னலுக்கு ஏற்ப டிரைவர் செயல்படாமல் போனால், கவச் எவ்வாறு செயல்படும் என்பது இந்த சோதனையில் துல்லியமாக கணக்கிடப்பட்டது. இதற்காக செமி-ஹை ஸ்பீடு வாப்-5 என்ஜின் பெட்டியை மத்திய வடக்கு இந்தியன் ரயில்வே பயன்படுத்தியது.

இந்த வாப்-5 என்ஜின் தான் சதாபதி மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் போன்ற பிரபலமான ரயில்களில் பயன்படுத்தப்படுகிறது. சதாபதி மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கவச் சிஸ்டம் ஏற்கனவே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய வடக்கு இந்தியன் இரயில்வே துறையினரால் இந்த கவாச் சோதனை ஓட்டம் ஹரியானாவின் பல்வால் மற்றும் உத்தர பிரதேசத்தின் மதுரா பகுதிகள் இடையே மேற்கொள்ளப்பட்டது.

Kokila

Next Post

மன அழுத்தத்தினால் அவதிப்படுறீங்களா.! இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்.!?

Sat Jan 27 , 2024
நவீன காலகட்டத்தில் அன்றாட பழக்கவழக்கங்களினாலும், துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதனாலும், உடலில் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைந்து பல நோய்கள் தாக்குகின்றன. இவ்வாறு உடலில் பல்வேறு நோய்கள் பாதித்து பலருக்கும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டு மனதளவிலும் அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இப்படிபட்ட வேகமான வாழ்க்கை முறையினால் மன பதட்டம், மன குழப்பம், கவலை அதிகரித்து நோய்வாய்படுகின்றனர். இவ்வாறு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மருத்துவரிடம் சென்று பல மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் பலருக்கும் […]

You May Like