தேசிய புலனாய்வு முகமை, தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இஸ்லாமிய இளைஞர்களைப் பயங்கரவாதம் நோக்கி செலுத்தியது, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது, 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வரத் திட்டமிட்டது ஆகிய சதி திட்டங்களில் அவர்கள் ஈடுபட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. சட்டத்திற்கு புறம்பான மற்றும் தேச விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், வஜீத் அலி, முபாரக் அலி மற்றும் சம்ஷேர் கான் ஆகியோர் மீது ராஜஸ்தானில் சதி வழக்கு தொடரப்பட்டது.
முன்னதாக ஆஷிப், சாதிக் மற்றும் முகமது சுஹெல் ஆகியோர் மீது இஸ்லாமிய இளைஞர்களைப் பயங்கரவாத செயல்களுக்குப் பயன்படுத்த அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி 2047ஆம் ஆண்டுக்குள் கொண்டுவரும் சதித் திட்டத்திற்கு எதிராக இருப்பவர்களை தாக்கவும் அரசை எதிர்க்கவும் இந்த ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.