fbpx

முன்னோர்களுக்கு படையல்..!! இன்று ஐப்பசி அமாவாசை..!! இதையெல்லாம் மறக்காமல் பண்ணுங்க..!!

இன்று ஐப்பசி மாத அமாவாசை. மாதந்தோறும் அமாவாசை திதி வருகிறது என்றாலும் கூட புரட்டாசி, ஆடி, தை, ஐப்பசி மாதங்களில் வரும் அமாவாசை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆடி அமாவாசை தினத்தில் பித்ருக்கள் பிதுர் லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு நம்மைப் பார்க்க வருவதாக ஐதீகம். மகாளாய அமாவாசையில் பூலோகம் வந்தடைகிறார்கள். மகாளய பட்ச காலத்தில் பூமியில் தங்கி அருள் புரிகிறார்கள்.

பித்ருக்களுக்கு யார் ஒருவர் தனது கடமையை மறக்காமல் செய்து வருகிறாரோ, அவரை மட்டுமின்றி, அவரது சந்ததியினரையும் தழைக்க செய்து வாழ வைக்கும். இந்நிலையில், அமாவாசையன்று எதையெல்லாம் செய்யக்கூடாது? எதை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

* அமாவாசை திதியில் விரதம் இருந்து தர்ப்பணம் செய்பவர்கள், அன்றைய தினத்தில் வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும்.

* முன்னோர்களுக்கு திதி கொடுத்த பின் கோலம் போடலாம். முன்னோர்கள் படங்களுக்கு துளசி சாற்ற வேண்டும்.

* அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்கும் சந்ததிகளுக்கு, பித்ருக்கள் நல்லருள் வழங்குவதாக ஐதீகம்.

* ஐப்பசியில் நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கங்கை தேவி வாசம் செய்கிறாள். இந்த மாத அமாவாசை தினத்தில் திதி கொடுத்து, நீர் நிலைகளில் குளிப்பது நன்மை தரும்.

* நமது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து நமக்கு நல்லருள் புரிய வேண்டி வழிபாடு செய்வதே தர்ப்பணம் ஆகும்.

* தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலையில் முன்னோர்களுக்கு படையல் போட்டு விட்டு சாப்பிடலாம்.

* தர்ப்பணம் கொடுத்து முடித்தவுடன் பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவு தருவது கூடுதல் பலன்களை தரும். அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் சிறப்பு.

* அதனால், அமாவாசை விரதம் இருப்பவர்கள் மேற்கண்ட வழிமுறைகளை மறக்க வேண்டாம். பித்ருக்களின் ஆசி என்றென்றுடன் உங்கள் குடும்பத்தைக் காக்கும்.

Read More : சென்னை மக்களே..!! இவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்..!! மோசமான நிலைமை..!!

English Summary

What should not be done on Amavasya? Know what to do.

Chella

Next Post

வாடிக்கையாளர்களே நோட் பண்ணிக்கோங்க..!! நவம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல்..!!

Fri Nov 1 , 2024
Customers can avoid unnecessary wandering and wastage of time if they know the working days and holidays of the banks in advance.

You May Like