ஜனவரி மாதத்தில் மட்டும் உலகளவில் கிட்டத்தட்ட 1 லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர்..
கடந்த ஆண்டு முதலே அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள், சேல்ஸ்ஃபோர்ஸ் உள்ளிட்ட பல பெரு நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்து வருகின்றன.. இதனால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அந்த வகையில் கடந்த மாதம் ஐடி ஊழியர்களுக்கு மிகவும் மோசமான மாதமாக அமைந்தது. அதாவது உலகம் முழுவதும் உள்ள 288க்கும் மேற்பட்ட வணிகங்களில் நாளொன்றுக்கு 3,300க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் வேலை இழந்ததாக கூறப்படுகிறது..
அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் சேல்ஸ்ஃபோர்ஸ் ஆகியவை ஊழியர்களைக் குறைத்த சில பெரிய ஐடி நிறுவனங்கள் ஆகும். அமேசான் ஜனவரி மாதத்தில் 18,000 பேருடன், கூகுள் 12,000, மற்றும் மைக்ரோசாப்ட் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.. ஆனால் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யாத ஒரே பெரிய தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள் மட்டும் தான்.. அந்நிறுவனம் தான் இன்னும் பணி நீக்க நடவடிக்கையை தொடங்கவில்லை..
2022-ல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 154,336 பணியாளர்களை பணியில் இருந்து நீக்கின.. குறிப்பாக சேல்ஸ்ஃபோர்ஸ் (7,000), ஐபிஎம் (3,900) மற்றும் எஸ்ஏபி (3,000) ஆகியவை கடந்த மாதத்தில் கடந்த மாதம் பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டன.. மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க், 11,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த நிலையில் 2023 ஆம் ஆண்டை “செயல்திறன் ஆண்டாக” அறிவித்துள்ளார். உலகளாவிய நெருக்கடி மற்றும் பொருளாதார கவலைகளை சமாளிக்க, ஆன்லைன் சந்தையான OLX குழுமம் 1,500 க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்தது..
இதனால் 2022 முதல் தற்போது வரை கிட்டத்தட்ட தகவல் தொழில்நுட்ப துறையில் மட்டும் 2.5 மில்லியன் பேர் வேலை இழந்துள்ளனர். அதிக பணியமர்த்தல், நிச்சயமற்ற உலகளாவிய நிதிச் சூழ்நிலைகள், கொரோனாவால் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க பின்னடைவு உள்ளிட்ட பல காரணங்களுக்க்காக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன குறிப்பிடத்தக்கது.