புதுச்சேரியில் ஆரோவில்லில் சிலைக்கடத்தல் பிரிவு நடத்திய அதிரடி சோதனையில் 20 பழமை வாய்ந்த சிலைகள் மற்றும் கலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரியில் பிரபலமான சுற்றுலாத்தலமான ஆரோவில் உள்ளது. அமைதியை தோற்றுவிக்கும் இடமாக ஆரோவில் உள்ளது. இங்கு ஏராளமானோர் சுற்றுலா வருபவர்கள் இந்த இடத்திற்கு வந்து தியானம் செய்கின்றனர். இதில் ஆரோ ரச்சனா என்ற கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த திருடப்பட்ட பழமைவாய்ந்த கலைப் பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து சிலைக் கடத்தல தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோதனை செய்ய அனுமதியையும் பெற்றனர்.

நேற்று ஆரோ ரச்சனாவில் சோதனையிட்டபோது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர். பழங்காலப் பொருட்களை மறைத்து வைத்திருந்தார். இதை வெளிநாட்டுக்கு கடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.இதற்கான ஆவணங்களை போலீஸ் கைப்பற்றியது. 13 கல் சிலைகள், 4 உலோக சிலைகள், 1 மரத்தால் ஆன கலைபொருள் , ஒரு ஓவியம் , 1 டெரகோட்டா என 20 கலை பொருட்களை அதிகாரிகள் அதிரடியாக கைப்பற்றி பிரஞ்சு நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வெண்கலத்தால் ஆன சொம்பு , மயில் டிசைனில் விளக்கு, அனுமன் சிலை , முருகன் சிலை , கிருஷ்ணன் ஓவியம் , விநாயகர் சிலை, டொமினிக் கார்டனில் நடனமாடும் அப்சரா மரம் உள்ளிட்ட 20 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.