fbpx

ஏ ஆர் எஸ் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் +2 படித்தவர்களுக்கு 80 காலியிடங்கள்! ₹100000 ரூபாய் வரை சம்பளம்!

சென்னையில் இயங்கி வரும் ஏ ஆர் எஸ் மார்க்கெட்டிங் ரிசர்ச் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு காலியாக உள்ள ஃபீல்ட் ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது அந்த நிறுவனம். இந்த அறிவிப்பின்படி அந்நிறுவனத்தில் காலியாக உள்ள ஃபீல்ட் ஆபீசர் பணிகளுக்கான 80 காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி ஃபீல்ட் ஆபீசர் பணிகளுக்கு 12 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதுமானது. இந்த வேலை வாய்ப்பிற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 25 ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு 55 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் திருச்சி திருநெல்வேலி,சேலம்,நாமக்கல் கோயமுத்தூர்,திண்டுக்கல்,ராமநாதபுரம் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்பணியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சம்பளமாக பணியின் அடிப்படையில் ஒரு லட்ச ரூபாய் வரை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு ஆண்,பெண் என இருப்பாலரும் விண்ணப்பிக்கலாம் . இந்தப் பணிகளுக்கு முன் அனுபவம் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் ஏ ஆர் எஸ் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று அதில் இந்த வேலை வாய்ப்பிற்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்து 31.05.2023 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பினை பற்றிய தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய arsmrs.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் .

Baskar

Next Post

வங்காளத்தில் அடினோ வைரஸ் பீதி: கொல்கத்தாவில் சுகாதார நிபுணர்களுக்கு எச்சரிக்கை; அறிகுறிகளும்! சிகிச்சை முறைகளும்!

Tue Feb 21 , 2023
மேற்கு வங்காளத்தில் காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளால் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மற்றும் டெங்குவுக்குப் பிறகு அடினோ வைரஸ், மக்களிடையே பெரும் கவலைகளை ஏற்படுத்திவருகிறது. தற்போதைய குளிர்காலத்தில், மேற்கு வங்காளத்தில் காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளால் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எனவே, அடினோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக, கொல்கத்தாவில் குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல் போன்ற […]

You May Like