தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் அனைத்து அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19ம் தேதி திறக்கப்படும் கல்லூரி கல்வி இயக்குநர் கீதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதேபோல அரசு உதவிபெறும், தனியார் சுயநிதிக் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் நிர்ணயித்த மொத்த வேலை நாட்கள் குறையாமல் இருக்க வேண்டும் எனவும், இறுதி வேலை நாளை கல்லூரி முதல்வர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வெயில் காலம் தொடங்கி, மக்களை சுட்டெரித்து வருகிறது.இந்த நிலையில் பள்ளிகள் முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி, மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.