fbpx

’விஜயகாந்துக்கு செயற்கை சுவாசமா’..? அவசர அறிக்கை வெளியிட்ட தேமுதிக தலைமை கழகம்..!!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 3-வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மார்பு சளி, இடைவிடாத இருமல் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதன் காரணமாக உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நுரையீரல் சளி பாதிப்பை சீர் செய்வதற்கான சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”கேப்டன் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான தகவல் வெளியிடும் தொலைக்காட்சிகளை யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற செய்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

த்ரிஷா-மன்சூர் விவகாரத்தில் முந்தியடித்துக் கொண்டு வந்த குஷ்பு..!! விஜயலட்சுமி சரமாரி கேள்வி..!!

Mon Nov 20 , 2023
நடிகை த்ரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது பெண்கள் ஆணைய விசாரணைக்கு பரிந்துரைத்த குஷ்பு, சீமான் மீதான தனது புகார்கள் குறித்து ஏன் பெண்கள் ஆணைய விசாரணைக்கு பரிந்துரைக்கவில்லை என நடிகை விஜயலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டார் என்பது நடிகை விஜயலட்சுமியின் புகார். 11 ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோல ஒரு புகார் கொடுத்தார். கடந்த ஆகஸ்ட் […]

You May Like