கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக சட்டமன்றத்தில் 2 தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம். பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பல முறை உயர்த்தப்பட்டது.
1952-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை ஒரே நேரத்தில் சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதுவரை 91 முறை மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டு உள்ளது. அதில் 50 முறை இந்திராகாந்தி, ஆட்சிகளை கலைத்ததால் தேர்தல் நடத்தும் காலம் மாறியது. ஒரே நாடு, ஒரே தேர்தலை முன்னாள் முதல்வர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் வரவேற்று எழுதியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் புத்தகத்தை படிக்கவில்லையா?இப்போது இல்லையென்றாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்காலத்தில் வரும் என்று கூறியுள்ளார்.