fbpx

கலைஞர் நினைவு தின பேரணி..!! மயங்கி விழுந்து உயிரிழந்த மாமன்ற உறுப்பினர்..!! பெரும் சோகம்..!!

கலைஞர் நினைவு நாள் அமைதிப் பேரணியில் பங்கேற்ற சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், 146-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சண்முகம் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து பேரணியை தொடங்கினார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த பேரணியில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மஸ்தான், தங்கம் தென்னரசு, சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி உட்பட திமுக அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

இந்த பேரணியில் பங்கேற்ற திமுகவின் செயற்குழு உறுப்பினரும், 146 வார்டு மாமன்ற உறுப்பினருமான சண்முகம் பேரணி தொடங்கி சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துள்ளார். அவருடன் வந்தவர்கள் அவரை தண்ணீர் தெளித்து எழுப்பிய நிலையில், அவர் எழும்பாததால் ஆம்புலன்ஸ் மூலமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

அதிக வட்டி... மறைமுக கட்டணங்கள்..!! ஆன்லைன் கடன் செயலியில் இருக்கும் ஆபத்து..!! ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!!

Mon Aug 7 , 2023
அதிக வட்டி முதல் மறைமுக கட்டணங்கள் வரை பல விஷயங்களை ஆன்லைன் கடன் செயலிகளில் கவனிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கடன் பெறுவது என்பது மிக எளிதாக இருந்தாலும் அதனை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் பெறுவதற்கு முன்பு முதலில் அந்த செயலி சட்டப்பூர்வமான செயலிதானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளின் […]

You May Like