ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது..
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி சர்ச்சை எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கூறி, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 2017 செப்டம்பரில் அமைக்கப்பட்டது. தனது விரிவான விசாரணையை தொடங்கிய ஆணையம், 154 பேரிடமம் விசாரணை நடத்தியது.. 5 ஆண்டுகளாக நீடித்த விசாரணை முடிவடைந்த நிலையில், ஆங்கிலத்தில் 500 பக்கமும் தமிழில் 608 பக்கமும் கொண்ட அறிக்கையை முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் சமர்பித்தார் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி.
இதை தொடர்ந்து ஆறுமுக சாமி ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது… ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் அறிக்கையில், கே.எஸ் சிவக்குமார், சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் ஜெயலலிதா மரணத்தில் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்தது.
இதனிடையே முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆறுமுக சாமி ஆணைய விசாரணை அறிக்கையில் தனது பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு தொடர்ந்தார்.. சாட்சியாக தன்னை அழைத்த ஆணையம், தன் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல..: என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார்..
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது..
மேலும் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளை பயன்படுத்தவும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.. ஆறுமுக சாமி ஆணையத்தால், விஜயபாஸ்கர் மீது கூறப்பட்ட அனைத்து கருத்துகளுக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கவும் ஆணையிட்டுள்ளது..