fbpx

மகாத்மா காந்தியின் பேரன் காலமானார்..‌! தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!

மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 89. இவர் மகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்தி- சுசீலா தம்பதிக்கு 2-வது மகனாக தெற்கு ஆப்பிரிக்காவில் பிறந்தவர். 2016-ம் ஆண்டு வரை நியூயார்க்கில் வசித்து வந்த அவர், பின்னர் இந்தியாவுக்கு திரும்பினார்.

கோலாப்பூரில் வசித்து வந்த அவர் வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை அருண் காந்தி உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மகன் துசார் காந்தி தெரிவித்துள்ளார். அருண் காந்தி மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மக்களே‌ எல்லாம் உஷாரா இருங்க...! இன்று 20 மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை...!

Wed May 3 , 2023
திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, புதுக்கோட்டை உள்ளிட்ட 20 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னல்‌ மற்றும்‌ பலத்த காற்றுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர்‌, நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, சேலம்‌, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, கடலூர்‌, அரியலூர்‌,பெரம்பலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, […]

You May Like