fbpx

இதுக்கா இவ்ளோ பேச்சு? இவ்வளவு ஆட்டிடியூட்? இதுலாம் ஒரு படமா..!! – கொட்டுக்காளி பார்த்து கடுப்பான சீரியல் நடிகர்

பல சீரியல்களில் ஒரு முன்னணி நடிகராக நடித்துக் கொண்டிருப்பவர் அருண்ராஜன். தற்போது வானத்தைப்போல சீரியலிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கொட்டுக்காளி படம் பார்த்த அருண்ராஜன் படம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், முடியல.. கொட்டுக்களி படத்தின் ஆடியோ விழாவில் இந்த படத்திற்காகவா சிவகார்த்திகேயன் இந்த பேச்சு பேசினீங்க? இந்த படத்தில் அப்படி என்ன இருக்கிறது என இந்த படத்தை நீங்கள் எடுத்தீர்கள்? சீரியஸாக சொல்லுங்கள். இதற்கு எதுக்கு உங்களுக்கு இவ்வளவு ஆட்டிடியூட்? இவ்ளோ பேச்சு? மக்களே நான் சீரியஸாக சொல்கிறேன். இது ஒரு படமும் கிடையாது.

ஒரு டாகுமென்டரியும் கிடையாது. ஒரு குறும்படமும் கிடையாது. ஒரு மண்ணும் கிடையாது. மொத்தமா இந்த படத்திற்கு செலவு எனப் பார்த்தால் 5000 ரூபாய் தான் ஆகியிருக்கும். அதில் சூரிக்கு நான்காயிரம் சம்பளம் கொடுத்து இருப்பார்கள். மீதி ஆயிரம் ரூபாயை வைத்து மற்ற செலவுகளை பார்த்திருப்பார்கள். ஒரு நாளில் எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன் .

மவனே சாகடித்துவிட்டார்கள். ரொம்ப இரிடேட் ஆகிவிட்டது. அப்படி என்னத்த சொல்ல வந்தீர்கள் இந்த படத்தில்? மக்களே கலையை வாழ வைக்கலாம். கலைஞர் என்ற பெயரில் படம் பார்க்க வந்த அனைவரையும் லூசாக்கி செருப்பை கழட்டி அடிச்ச மாதிரி ஓட விட்டு இந்த மாதிரி புலம்ப விடக்கூடாது இப்போது மணி ஒன்று ஆகிவிட்டது. இதுவரைக்கும் என்னால் தூங்க கூட முடியவில்லை. அந்த அளவுக்கு இந்த படம் என்னை மிகவும் எரிச்சல் அடைய வைத்திருக்கிறது என கூறி இருக்கிறார் அருண் ராஜன்.

Read more ; சூடான உணவுகளை உண்பவரா நீங்கள்..? ஆபத்து..!! இத கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

English Summary

Arunrajan is a leading actor in many serials. Currently, he is acting in the serial like Vaanathipola. Arunrajan, who recently saw the film Kotukkali, spoke about the film.

Next Post

தமிழகமே ஷாக்...! செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்க கட்டணம் ரூ.150 வரை உயர்வு..!

Tue Aug 27 , 2024
From September 1, the customs fee will increase to Rs.150

You May Like