ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸில் (RIMS) ஜூனியர் டாக்டரை பாலியல் வன்முறை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்டது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தைக் கண்டித்து இதுநாள் வரை நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்த நிலையில், இப்போது அது சர்வதேச அளவில் வெடித்துள்ளது. ஏற்கனவே போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், இப்போது அது உலகெங்கும் 25 நாடுகளில் வெடித்துள்ளன.
இந்த அதிர்வலை ஓய்வதர்கு ராஞ்சியில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையின் புற்றுநோயியல் துறையைச் சேர்ந்த பெண் ஜூனியர் ரெசிடென்ட் மருத்துவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. மருத்துவ மனையின் லிஃப்டுக்குள் சென்ற பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் மருத்துவ சமூகத்தினரிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்தனர், ஆனால் மருத்துவ நிபுணர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்த மருத்துவமனைகளில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் தேவையை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. கைதானவர் அதே மருத்துவமனையில் பணி செய்யும் ஆண் மருத்துவர் என கூறப்படுகிறது. கைதான நபர் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
Read more ; இந்தியாவில் பரவிய Mpox.. கொடிய நோயிலிருந்து பாதுகாப்பது எப்படி? மருத்துவர் தரும் அட்வைஸ்..!!