fbpx

சமூகத்தில் சமத்துவமின்மை, பாகுபாடு இருக்கும் வரை இந்தியாவுக்கு இட ஒதுக்கீடு தேவை!…ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

சமூகத்தில் சமத்துவமின்மை, பாகுபாடு இருக்கும் வரை இந்தியாவுக்கு இட ஒதுக்கீடு தேவை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இடஒதுக்கீடு கோரி மகாராஷ்டிராவில் மராத்தா சமூகம் தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார். ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைமையகமான நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், 1947-ல் இந்தியாவிலிருந்து பிரிந்தவர்கள் இப்போது தங்களின் தவறை உணர்ந்து கொண்டிருப்பதாகவும், தற்போதைய இளம் தலைமுறையினர் முதுமை அடைவதற்குள் “அகண்ட பாரதம்” நிஜமாகிவிடும் என்றும் கூறினார். இடஒதுக்கீடு குறித்த பகவத்தின் கருத்துக்கள், இடஒதுக்கீடு கோரி மகாராஷ்டிராவில் மராத்தா சமூகம் நடத்திய போராட்டத்துடன் ஒத்துப்போகிறது என்று கூறினார்.

2000 ஆண்டுகளுக்கும் மேலாக சக மனிதர்களை புறக்கணித்து, வரலாற்று ரீதியாக சமூக சமத்துவமின்மையை நிலைநிறுத்தி வருகிறோம். இந்த அநீதியைத் தீர்க்க, சமத்துவம் அடையும் வரை இடஒதுக்கீடு போன்ற சிறப்பு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இடஒதுக்கீடுகளை ஆர்எஸ்எஸ் முழுமையாக ஆதரிக்கிறது” என்று அவர் வலியுறுத்தினார். எப்போதும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், சமூகத்தில் பாகுபாடு இன்னும் உள்ளது என்று பகவத் கூறினார்.

Kokila

Next Post

தமிழகத்தையே பதைபதைக்க வைத்த பல்லடம் கொலை வழக்கு….i முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்…..!

Thu Sep 7 , 2023
திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில், சில நாட்களுக்கு முன்னர், ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்,குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார். அத்துடன், முதல்வர் தரப்பிலும் இதற்கு கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கை, விசாரிப்பதற்கு தனி படை அமைக்கப்பட்டு, விசாரணை […]

You May Like