புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா மோடியை சந்தித்து புதிய கட்டிடத்தை திறப்பதற்கான அழைப்பு விடுத்தார். புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், லோக்சபா அறையில் 888 உறுப்பினர்களும், ராஜ்யசபா அறையில் 300 உறுப்பினர்களும் அமர முடியும். இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்தால், லோக்சபா அறையில் மொத்தம் 1,280 உறுப்பினர்கள் இடம் பெறலாம்.
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து நேருவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழன்டா என்ற ஹேஷ்டேக் பதிவு செய்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்; இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் செங்கோல். தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 10, 2020 அன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது